Wednesday, September 7, 2011

இலங்கை அரசு மேற்கொண்டுவரும் விசாரணைகளில் குறைபாடுகள்!

 http://www.pularvu.com/ 

PDF அச்சிடுக மின்னஞ்சல்
amnestyஇறுதிப் போரில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசு மேற்கொண்டுவரும் விசாரணைகள் குறைபாடுகளைக் கொண்டது என்றும் அது சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்குப் பதிலீடாக அமையாது என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.  இலங்கை அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை விமர்சித்து அனைத்துலக மன்னிப்புச்சபை 69 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

“அவர்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்?’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், இறுதிக்கட்டப் போரின்போது குறைந்தது 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதற்கான நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் உதவிப் பணியாளர்களின் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
குடிசனச் செறிவு மிக்க இடங்கள் மீது இராணுவம் ய­ல் தாக்குதல் நடத்தியது என்றும் இலங்கை அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு, போரின் இறுதிக்கட்டம் தொடர்பாக செய்த மீளாய்வு அதிகாரம், தொகுப்பு மற்றும் நடைமுறை என ஒவ்வொரு மட்டத்திலும் தவறுகளைக் கொண்டது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
முன்னாள் அரச அதிகாரிகளை அதிகமாகக் கொண்ட இந்த ஆணைக்குழு சட்டவிரோத படுகொலைகள், காணாமற்போதல்கள் உள்ளிட்ட ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பான சான்றுகளை விசாரிக்கத் தவறிவிட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பகமானது என்றோ, சர்வதேச விசாரணைகளுக்கு மாற்றீடானது என்றோ அனைத்துலக சமூகம் ஏமாந்து விடக்கூடாது. அது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை சவால்களின்றித் தொடர இடமளித்து விடும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் சாம் சபாரி தெரிவித்துள்ளார்.
 
ஜெனிவாவில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள ஊடகச்சந்திப்பு ஒன்றில் இந்த அறிக்கையை சர்வதேச மன்னிப்புச்சபை அதிகாரபூர்வமாக வெளியிடவுள்ளது.
 

0 comments:

Post a Comment

Kindly post a comment.