Thursday, September 8, 2011

மூவரின் தூக்குத் தண்டனை ரத்து செய்ய வேண்டும்-சி.மகேந்திரன்




 
 
\தூத்துக்குடியில், தூக்குத்தண்டனைக்கு எதிரான  தெரு  முனைப் பிரச்சாரம்,  தூத்துக்குடி  நீதிமன்ற நுழைவு வாயிலில் நடைபெற்றது.
 
மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரும் ராஜீவ் காந்தி  கொலை வழக்கில் குற்றவாளிகள்தானா என்பதை ஜெயின்  கமிஷனால் கூட  நிரூபிக்க  முடியவில்லை. காரணம்  வெடி குண்டு கட்டிக் கொண்டு ராஜீவ்  காந்தியைக்  கொலை செய்ததாகக் கூறப்படுகின்றது. அபடியானால்  வெடி குண்டு தயாரித்தது யார்  என்பதைக்  கண்டு பிடிக்க  முடியாத்  நிலையே இருக்கின்றது.
 
21ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை பெற்ற இவர்களின்  வழக்கை  முடிக்க வேண்டும்  என்பதற்காகவே, இவர்களைக்  காவல் துறையினர்  குற்றவாளிகளாக  அடையாளங் காட்டியுள்ளனர். சிறயில்  உள்ள சாந்தன், நீதிமன்றத்தில்,  சாந்தன் என்பவர்  இறந்து விட்டார், அவ்ர் பெயரில் உள்ள என்னைக் குற்றவாளியாகியுள்ளனர்
 
தர்பொழுது எட்டுவாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. முழுமையான தடை கிடைப்பதற்கு தமிழர்கள்  அனைவரும் ஒன்று பட்டுப் போராடவேண்டும்.இந்தப் பிரச்சினையில்  ஜனாதிபதியும், இந்திய அரசும் மரண தண்டனை  உத்தரவை  ரத்து ச்செய்ய வேண்டும்.

இவ்வாறு சி.பி.ஐ. தமிழ் மாநிலத் துணச் செயலர் சி. ம்கேந்திரன் தூத்துக்குடியில்  பேசியுள்ளார். படம் இனாயத்தில் எடுக்கப்பட்டது.

 


0 comments:

Post a Comment

Kindly post a comment.