Thursday, September 8, 2011

வேலூர் சிறையிலிருந்து ஆனந்த விகடன் கட்டுரைக்கு ம.தி. சாந்தன் எழுதிய கடிதம்!

தோழர் சி.மகேந்திரன் ஆனந்த விகடனில் கடந்த நான்கு  வாரங்களாகத் தொடர்ந்து  எழுதிவரும் ‘வீழ்வேனென்று நினைத்தாயோ’  என்ற கட்டுரை  தொடர் பற்றி, மரண தண்டனை விதிக்கப்பட்டு  வேலூர்  சிறையில்  இருக்கும் மூவரில்  ஒருவராகிய, ம.தி.சாந்தன்  எழுதிய கடிதம்.

அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஐயா... தங்க்ளினதும்,  தஙக்ளைச்  சார்ந்தவர்களினதும் வளமான வாழ்வினை விரும்பும் மனிதன் மடல் வரைகின்றேன்

நீண்ட.... மிக நீண்ட  நாட்களுக்குப் பிறகு தொடர்பு கொள்கிறேன்.  இடையில் எவ்வளவோ  சம்பவங்கள்  நடந்தேறிவிட்டன. 

வேதனையையும் கண்ணீரையும் கொண்டு  வந்து கொட்டிய 2009 மே மாதத்தினை மீளவும்  நினைக்கும்படி செய்கிறது ஆனந்த விகடன் இதழில் தாங்கள் எழுதிவரும்  ”வீழ்வேனென்று  நினைத்தாயோ?”.

நம்மைப்  பரிதவிக்கவிட்டுப்போன அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் மனசு விம்முகிறது. நம்மில்  பலரும் எதிர்பார்க்காத அந்த வீழ்ச்சி  உலகத்  தமிழினத்தை இப்போது  வீறு கொண்டு எழச் செய்திருக்கிறது. அந்தப் பணியை இன்னும் சிறக்கச் செய்யும் விதமாக  அமைந்துள்ளது  தங்கள்  எழுத்து.

அது முடிவல்ல. இரண்டு துடிப்புகளுக்கு இடையிலான இடைவெளி என்பதை  வரலாறு சொல்லும்.  இந்த வரலாறு நிச்சயமாகத்  தங்களின்  பங்களிப்பையும் சொல்லும்.  சிரமத்திற்கு  வருந்துகிறேன்.

நன்றி.

அன்புள்ள, 
ம.தி.சாந்தன்
13905
மரண தண்டனைச் சிறைவாசி
உயர் பாதுகாப்புத் தொகுதி-I
மத்திய சிறை-வேலூர்
632202.



0 comments:

Post a Comment

Kindly post a comment.