Thursday, September 8, 2011

டெல்லியில் குண்டு வெடிப்பு: காயம் அடைந்தவர்களை காப்பாற்றிய; தமிழ் நர்ஸ் “மங்கை”

 
 

 
டெல்லி உயர்நீதிமன்றத்தில்  நேற்று குண்டு வெடித்தது. இதில் 11 பேர் பலி யானார்கள்.   அங்கு நின்று கொண்டிருந்த 76 பேர் பலத்த காயம் அடைந்தனர். வெடிகுண்டு சிதறல்கள் பாய்ந்து பலர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.
 
கை கால்கள் சிதைந்த நிலையிலும் உடல் வெந்தும், ரத்த காயங்களுடனும் துடித்தவர்கள் அய்யோ... அம்மா... என்று அலறி அபய குரல் எழுப்பினார்கள். அருகில் இருந்த நீதிமன்ற மருத்துவ மனையிலும் அது எதிரொலித்தது.
 
அப்போது நேரம் காலை 10.15 மணி. அந்த ஆஸ்பத்திரியில் நர்ஸ் ஆக பணிபுரியும் மங்கை காதில் அந்த சத்தம் கேட்டது. உடனே அவர் ஓடிச் சென்று விசாரித்தபோது, ஐகோர்ட்டின் 5-வது நுழை வாயில் அருகே குண்டு வெடித்தது தெரிந்தது. உடனே தன்னுடன் பணி புரியும் மற்ற நர்சுகள் ஊழி யர்களையும் அழைத்துக் கொண்டு நர்சு மங்கை குண்டு வெடித்த இடத்துக்கு சென்றார்.
 
அங்கு ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டு இருந்தவர்களை மற்ற ஊழியர்கள் உதவியுடன் மருத்துவமனைக்குக்  கொண்டு சென்றார். காயம் அடைந்த பலர் குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டதால் உயிர் பிழைத்தனர். தீவிர சிகிச்சை தேவைப்படுவோரை டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் மங்கை ஏற்பாடு செய்தார்.
 
 இதற்கிடையே அவசர சிகிச்சைக்கான மருந்து மற்றும் மருத்துவ பொருட் களை,  கருவிகளைத்  தயார் நிலையில் வைத்திருக்கும் படியும் அவர் அதிகாரிகள் மூலம் தகவல் அனுப்ப தமிழ் நர்ஸ் மங்கை ஏற்பாடு செய்தார். குண்டு வெடிப்பு பற்றிய தகவலை மற்ற மருத்துவ மனைகளுக்கும்  அவர் தெரி வித்தார்.
 
 தமிழ் நர்ஸ் மங்கையின் முயற்சியால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன. பெருமைப்பட வேண்டிய செயல்  என்று மருத்துவ மனையின்  மூத்த அதிகாரி  ஒருவர் கூறினார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.