Wednesday, September 7, 2011

700 வருடங்கள் பழமையான குதிரைகளின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

 
சீனாவில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கிறீஸ்துக்கு பின் 700 வருடங்களிற்கு முன்னர் வாழ்ந்த குதிரைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் ஹெனான் மாகாணத்தின் லியோயாங் பகுதியிலுள்ள Zhou Dynasty புதைகுழியில் தான் கி.மு.770 ஆண்டுகள் பழமையான 4 குதிரைகளும் ஒரு குதிரைவண்டியினதும் எச்சங்கள் அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டன.

செங்குத்தாக அமைந்த இந்த பிரதான புதைகுழியில் 12 குதிரைகள் கண்டுபிடிக்கப்படுள்ளதாக கூறப்படுகின்றது.

இக்குதிரைகள் தேருக்கருகில்  விழுந்துகிடந்ததன் மூலம் கொல்லப்பட்டு இருக்கலாம் என ஆராய்ச்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் இக் குழியில் முற்காலத்தைய மேற்கு Zhou பாரம்பரியத்தின் வெண்கலப் பாத்திரங்களதும் மட்பாத்திரங்களதும் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.