Wednesday, September 7, 2011

நீதிமன்ற குண்டு வெடிப்புக்கு ஹூஜி தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு



டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்கத்-உல்-ஜிகாத் அல்-இஸ்லாமி தீவிரவாத (Huj-ஹூஜி) அமைப்பு பொறுப்பேற்புள்ளது.

இது தொடர்பாக அந்த தீவிரவாத இயக்கத்திடமிருந்து இ-மெயில் வந்துள்ளது. இந்தத் தகவலை  மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ  (National Investigation Agency)  உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால்இ இது குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே ஹூஜிக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று என்ஐஏ டைரக்டர் ஜெனரல் சின்ஹா கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்களில் ஹூஜி அமைப்புக்கு தொடர்பு இருந்தது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
26/11 மும்பை தாக்குதலில் கொலாபாவில் உள்ள சபத் ஹவுஸ் மையத்தில் தாக்குதல் நடத்தியது இந்த அமைப்பு தான்.

இந் நிலையில் டெல்லி குண்டுவெடிப்புக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு வங்கதேசம், பாகிஸ்தானில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் வங்கதேசம் சென்றுள்ள நிலையில் டெல்லியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தில் ஹூஜி அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.