Sunday, September 4, 2011

சட்டவிரோத காணாமல் போதல் தொடர்பான ஐ.நா சாசனத்தில் கையெழுத்திடுமாறு இலங்கைக்கு வலியுறுத்தல்

[ ஞாயிற்றுக்கிழமை, 04 செப்ரெம்பர் 2011, 03:12.23 AM GMT ]
சட்டவிரோதமான காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குழு இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.

இந்தக்குழு இலங்கைக்கு வருகைத்தர பல தடவைகள் அனுமதி கோரியபோதும் அதற்கான அனுமதியை இலங்கை வழங்கவில்லை என்று சட்டவிரோதமாக காணாமல் போனோர் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் உறுபபினர் மார்டிஸ் ஜோசு பெல்லாடோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெறும் நிறுவன நிகழ்வுக்கு வருமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த நிகழ்வில் பங்கேற்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளது.

இது தொடர்பில் இரண்டு ஞாபகமூட்டல் கடிதங்களை ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத காணாமல் போவோர் தொடர்பான நடவடிக்கைக்குழு, இலங்கைக்கு அனுப்பியபோதும் அதற்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை
.
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பில் 12,230 முறைப்பாடுகளை ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் நடவடிக்கை குழு கொண்டிருக்கிறது.

இதில் 40 முறைப்பாடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
6535 முறைப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணைனைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. எனினும் 5653 முறைப்பாடுகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

இதேவேளை இலங்கை அரசாங்கம் தமது எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத காணாமல் போதல் சம்பவங்களை கட்டுப்படுத்துமாறு பலதடவைகளாக இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
   http://www.tamilwin.com/index.php
       

0 comments:

Post a Comment

Kindly post a comment.