Sunday, September 4, 2011

அருந்ததிராய் அடையாளங்காட்டும் அன்னாஹசாரே


மணிப்பூரில் AFSA  சட்டத்தை அகற்றச்  சொல்லிக்  கடந்த பத்து  ஆண்டுகளுக்கும்  மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தை  நடத்தி  வருகின்றார், ஐரோம் ஷர்மிளா !  இந்தப்  போராட்டத்திற்கு  ஊடகங்களோ,  பொது மக்களோ ஹசாரே போராட்டத்திற்குத் தரும் அளவிற்கு ஆதரவைத் தரவில்லையே ஏன்?

போபால்  விஷவாயுக்  கசிவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கோ அல்லது நர்மதா அணைக்கட்டும்  திட்டத்திற்காக வெளியேற்றப்பட்டவர்களுக்கு ஆதரவாகவோ அல்லது புனெயிலோ.  ஹரியானாவிலோ, நொய்டாவிலோ  நில ஆக்கிரமிப்பின்போது  வெளியேற்றப்பட்ட விவசாயிகளுக்கோ, இந்த
ஊடகங்களோ,  பொது மக்களோ ஹசாரே போராட்டத்திற்குத் தரும் ஆதரவைத் தரவில்லையே ஏன்?

கூடங்குளம் அணுமின் நிலைய அமைப்பின  எதிர்த்து நடத்தும் போராட்டத்திற்குப்  போதிய ஆதரவு  தரவில்லையே   ஏன்?

காந்தியின்  பார்வைதானே ஹசாரேயின் பார்வை. ஒவ்வொரு கிராமத்திலும், ஒரு சக்கிலியரும், ஒரு வண்ணானும், ஒரு  நாவிதனும் இருக்கவேண்டும் அவர்கள் தங்களது  வேலையைச்  செய்யும்போது ஒவ்வொரு  கிராமமும் சுயமாக இயங்கக்கூடியதாக  தற்சார்புடையதாகின்றது. என்கிறார்  காந்தி. எனவேதான்,  சமத்துவத்திற்கான  இளைஞர்  குழுவும், இட ஒதுக்கீட்டிற்கான எதிர்ப்புக் குழுவும் ஹசாரேயை  ஆதரிக்கின்றனர்.

ஹசாரேவின் சொந்தக்  கிராமமான  ரேலிங்கா  சித்தி கிராமத்தில்  கடந்த 25 ஆண்டுகளாக கிராம அவைத்  தேர்தலோ,  கூஉட்டுறவுத்  தேர்தலோ என்ற தகவலை, முக்திசர்மா  என்பவர் சொல்லுகின்றார்.  இதற்கு ஹசாரேவின்  பதில்  என்ன?

கொக்ககோலா, லெகுமன் பிரதர்ஸ், கபீர்,  மனீஷ் சைகோடியா, போர்டு போன்ற பெருநிறுவனங்களிடம்  பல  லட்சங்கள்  நன்கொடையாகப்பெற்ற தொண்டு  நிறுவனங்களால்  ஹசாரேவின்  உண்ணாவிர நிகழ்ச்சி  வழி  நடத்தப்  படுகின்றது.

அலுமினியத்  தொழிற்சாலையும், துறைமுகமும், சிறப்புப் பொருளாதார மண்டலம்துவங்குவோரும். ரியல் எஸ்டேட்  தொழில்  செய்பவர்களும், கோடிக்கணக்கான ரூபாய்  ப்ணப்புழக்கமுள்ள  அரசியல்  தொடர்புடையவர்களும் இந்த ஊழல்  எதிர்ப்புப்  பிரச்சாரத்தை  ஆதரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு ஊழல் எதிர்ப்பில் இவ்வளவு அளவு  கடந்த திடீர்  அக்கறை  ஏன் ? 

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்ச்சியாக  பல்வேறு  ஊழல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. காங்கிரஸ் மற்றும்  பிஜேபி கட்சிக்காரர்களும், பெரும் நிறுவனங்களும், மூத்த  பத்திரிக்கையாளர்களும், அமச்சர்களும், அரசியல்வாதிகளும் கோடிக்கணக்கான  மக்களின்  பொதுப்பணத்தை ஊழல்  மூலம் களவாடியுள்ளது  அம்பலத்திற்கு வந்த  வேலையிதான்  இந்த ஜன் லோக்பால்  மசோதா பூதாகரமாக வெளி வந்துள்ளது.

முதன் முறையாக சில பத்திரிக்கையாளர்களும் வெட்கித்  தலை குனிந்து,, பெரு நிறுவன்ங்களின்  தலைவர்களைப்  போலவே ஊழலில்  சிக்கி சிறைக்குச்  செல்லும்  வாய்ப்பும் உருவாகியுள்ளது.


அரசு  செய்து வந்த வேலைகளான குடிநீர்  விநியோகம், மின்சாரம், போக்குவரத்து, தொலை தொடர்பு, சுரங்கம், சுகாதாரம்,  கல்வி ஆகியவையும்  இன்னும் சிலவும் தொண்டு நிறுவனங்கள்  மற்றும்  பெரு நிறுவனங்களிடம்  ஒபடைக்கப்பட்டு விட்டன.

இந்த நிறுவனங்கள்,  தொண்டு அமைப்புகள் லோக்பால்  மசோதாவின்  கட்டுப்பாட்டிற்குள்  வருவார்களா? 

(அருந்ததிராய் கட்டுரையின் ஒரு பகுதி)

0 comments:

Post a Comment

Kindly post a comment.