Thursday, August 18, 2011

உலகில் பட்டினியை ஒழித்த நாடுகள் பட்டியலில் இலங்கை,நேபாளம் மற்றும் பாகிஸ்தானை விட கீழே உள்ளது இந்தியா.

2010 ஆம் ஆண்டுக்கான “உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல்%27 திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ஆபிரிக்க நாடுகளில் மட்டும் கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.100 கோடி பேர் பட்டினியால் தவிக்கிறார்களாம்.

அதேநேரம் பட்டினி ஒழிப்பில் உலக அளவில் தெற்காசியாவும் தென்னமெரிக்காவும் பெரும் முனைப்புக் காட்டுவதாக இந்த அறிக்கை கூறுகிறது.குறிப்பாக மலேசியா இதில் மெச்சத்தக்க அளவில் பல முயற்சிகளை எடுத்து பட்டினியைக் குறைத்துள்ளதாகவும் இன்று கிட்டத்தட்ட பட்டினியற்ற தேசமாகவே மலேசியா மாறியிருப்பதாகவும் இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.

அதேநேரம் குழந்தைகளுக்கு சத்தான உணவு அளிப்பதில் இன்னும் உலகம் முழுக்க போதிய விழிப்புணர்வற்ற நிலையே உள்ளதாகவும் இந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.குழந்தைகளுக்கு முதல் 1000 நாட்கள் சத்தான ஆகாரம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையை பல நாடுகள் பின்பற்றுவதில்லை என்று வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையத் தலைவர் மேரி ரவுல் தெரிவித்துள்ளார்.

இந்த பட்டியலின்படி பட்டினியை முற்றாக ஒழித்த நாடு என்ற பெருமையைப் பெறுகிறது குவைத்.இதற்கு அடுத்த இடம் மலேசியாவுக்கு கிடைத்துள்ளது.

84 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில் சீனாவுக்கு 9 ஆவது இடம் கிடைத்துள்ளது. பட்டினி ஒழிப்பில் இலங்கை 39 ஆவது இடத்தையும் நேபாளம்,பாகிஸ்தான் 57 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்தியாவோ 67 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.உலக வல்லரசுகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் இந்தியாவில் பட்டினி ஒழிப்புக்கான திட்டங்களை ஏட்டளவில் வகுப்பதோடு நிறுத்திக் கொள்வதுதான் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.இங்கே பயன்படுத்தப்படும் உணவு தானியங்கள் பயன்படுத்தப்படுவதைவிட வீணாக்கப்படுவதே அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவு உலகின் எடை குறைந்த நோஞ்சான் குழந்தைகளின் எண்ணிக்கையில் 42 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக அந்த மதிப்பீடு தெரிவிக்கிறது.ஆனால் பாகிஸ்தானில் இது வெறும் 5 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு இந்தப்பட்டியலில் இந்தியா 65 ஆவது இடத்திலிருந்தது.இந்த ஆண்டு 67 ஆவது இடத்துக்குச் சென்றுள்ளது.

குவைத்,மலேசியா,துருக்கி,மெக்ஸிகோ, டுனீஷியா,நிகாரகுவா, கானா,ஈரான், சவூதி அரேபியா மற்றும் சீனா ஆகியவை பட்டினி ஒழிப்பில் உயர்மட்டத்தில் உள்ளன.

1 comments:

  1. Geetha Sambasivam geethasmbsvm6@gmail.com to illam

    show details 2:03 PM (5 minutes ago)

    இன்றைய தினசரியில் அன்னதானத்தில் உணவு பெறுவதற்குக் கையில் தட்டோடு வரிசையில் காத்திருப்பவர்களைப் பார்த்தால் இந்தியா இன்னும் கீழே போனாலும் ஆச்சரியமே இல்லை.
    இல்லம் குழுமம் மூலமாக.

    ReplyDelete

Kindly post a comment.