Thursday, September 1, 2011

மின்னஞ்சல் முகவரியில் @இந்தியா என்று இருக்க வேண்டுமா?




இந்தியாடாட்காம் இணைய இதழில் வந்த செய்தியும் படமும். இப்பொழுது தலைப்பிற்கு வருவோம்.

http://www.india.com/ என்ற முகவரிக்குச் செல்லுங்கள். இது ஒரு மின் இதழ். முகப்பின் இடது பக்கத்தில்நமது மின்னஞ்சலில்Want யுவர் நேம் @ இந்தியா என்ற வினாவும், விரும்பினால் பதிவு செய்யுங்கள் என்ற வழிகாட்டுதலும் இருக்கும். மற்றவை வழக்கம்போல். தற்பொழுது தங்கள் பெயருடன் நாட்டின் பெயரும் இணந்த மின்முகவரி தயார்.

இவர்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மும்மொழிகளிலும் செய்தி மின்மடல்கள் நடத்துகின்றனர். பல வணிகங்களும் நடத்துகின்றனர்.

மின்னஞ்சலில், ஆங்கிலம், இந்தி, மராத்தி, தமிழ், பெங்காலி பயன்படுத்தும் வசதிகள் உள்ளன.

இவர்கல் தரும் மின் முகவரி மூலமாக, நமது மின்னஞ்சல் பெட்டிக்குள் செல்லும் பொழுதெல்லாம் இவர்களது பத்திரிக்கச் செய்திகளின் தலைப்புக்களையேனும் படிக்காமல் இருக்க முடியாது.

மின்னஞ்சல் முகவரியில் இந்தியாவைச் சேர்த்திட விரும்புவோர் இந்தியா.கொம்-ஐப் பயன் படுத்திக் கொள்ளலாம். ஒன்றுபட்ட இந்தியா எங்கே இருக்கின்றது என்று வினா எழுப்புகின்றீர்களா?

தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாய்ச்
சாகடிக்கப் பட்டபோது- இன்றும் அது தொடர்கதை ஆகின்றபோது- மீனவர்கள் தொல்லைகளைக் கண்ணுறும்போது- முல்லை பெரியார்-காவேரி பிரச்சினைகளின் போது இந்தியா ஒன்று பட்ட தேசமா என்ற ஐயப்பாடு தோன்றுவது நியாயம்தானே?

1 comments:

Kindly post a comment.