இந்தியாவில் இலங்கைத் தமிழர் நால்வர் கைது
இலங்கைத் தமிழர் நால்வர் சென்னை விமான நிலையத்தில் நேற்றைய தினம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போலி ஆவணங்கள் வைத்திருந்த காரணத்தால் இவர்கள் நால்வரும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
போரூரைச் சேர்ந்த ராஜேந்திரன், மண்டபம் அகதி முகாமைச் சேர்ந்த சசிகரன், கும்மிடிப்பூண்டி அகதி முகாமைச் சேர்ந்த சிறிராம் மற்றும் திருச்சி கே.கே நகரைச் சேர்ந்த செந்தூரன் என்பவர்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆவர்.
இந்த நால்வரும் கடந்த ஜூலை மாதம் இந்திய கடவுச்சீட்டு மற்றும் போலி ஆவணங்களுடன் சிங்கப்பூருக்கு கோயமுத்தூரில் இருந்து சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிங்கப்பூர் முகவர் ஒருவர் வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக வாக்குறுதியளித்ததை அடுத்து சிங்கப்பூர் சென்றதாகவும் அங்கிருந்து பிரான்ஸுக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் குறித்த நால்வரும் பொலிஸரிடம் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர் சென்ற ஒவ்வரெவரிடமும் வேலை பெற்றுதருவதாகக் கூறி 2.5 லட்சம் ரூபாய் பணத்தினை பெற்று தலைமறைவாகியுள்ளார் சிங்கப்பூர் முகவர். இதனையடுத்து சிங்கப்பூர் பொலிஸார் இலங்கைத் தமிழர் நால்வரையும் கைது செய்து ஒருமாதம் சிறைப்படுத்தியது. பின்பு இந்தியாவிற்கு திருப்பியனுப்பிய நிலையில் இவர்கள் நேற்றைய தினம் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எத்தனையோபேர் ஏமாந்த கதையினைத் தெரிந்திருந்தும் மாட்டிக்கொண்டு விழிப்பது சரிதானா?
http://www.sankamam.com/beta/
0 comments:
Post a Comment
Kindly post a comment.