Tuesday, August 30, 2011

தேசிய நினைவேந்தல் அகவம்'

உலகில் வாழும் ஒவ்வொரு மனித இனத்தையும் அடையாளப்படுத்தி நிற்பவை அவர்களது நாடும் மொழியுமே. அந்தவகையில, எம் தாயகமாம் தமிழீழமும், தாய்மொழியாம் தமிழுமே எம்மை தமிழனாக இனங்காட்டி நிற்கின்றன. அந்த இனங்காட்டலுக்காக நாம் கொடுத்த விலைகள் அதிகம்ளூ ஆனாலும் எமது இலட்சியம் இன்னும் ஈடேறவில்லையே என எம்முள் பலருக்குள் சலிப்பு.

இதில் சலிப்படைவதற்கு எதுவுமே இல்லை ஒவ்வொரு அஸ்தமனமும் புதிய விடியலின் அறிகுறி என்பதை இயற்கையே எமக்கு தினமும் எடுத்தியம்புகின்றது.
எமது இலட்சியமும் அதற்காய் ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் போராட்டமும் நியாயமானது. தர்மத்தின் வழியில் வளர்க்கப்பட்டது.

விடுதலைக்காய் நாம் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களை வித்துக்களாக விதைத்துள்ளோம். அவர்களுடைய ஈகங்களை நாங்கள் என்றென்றும் போற்ற வேண்டும் என்பதை முதலில் நாம் ஒவ்வொருவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அந்தப் புரிதலின் அடிப்படையிலும,;

இன்று தாயகத்தில் போரின் வடுக்களைத் தாங்கி வாழ்வின் நிமிர்விற்காய் போராடும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கும் மறுவாழ்வளிக்கும் நோக்கோடும் உருவானது தான் எமது இந்த 'தேசிய நினைவேந்தல் அகவம்' என்னும் அமைப்பு ஆகும்.


http://maveerarnaal.com/index.php?id=34

0 comments:

Post a Comment

Kindly post a comment.