வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான,கோத்ரெஜ் வாடிக்கையாளர்கள் வசதிக்காக சிறிய அளவிலான,மினி கூலிங் மிஷின் ஒன்றை வடிவமைத்துள்ளது. தயாரிப்பை விற்பனை செய்ய, இந்திய அஞ்சல் துறையுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இதன்படி, இந்நிறுவனத் தயாரிப்பை, அனைத்து தபால் நிலையங்களிலும், பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம்.
இத்திட்டத்தை, சென்னையில் தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் சாந்தி நாயர் நேற்று துவக்கி வைத்துப் பேசும்போது, தங்க நாணயம் விற்பனை, வாட்ச் விற்பனை உள்ளிட்ட, பல்வேறு சேவைகளை, தபால் துறை மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வரிசையில், தமிழகத்திலுள்ள அனைத்து தபால் நிலையங்களிலும், கோத்ரெஜ் நிறுவனத் தயாரிப்பான,மினி கூலிங் மிஷின் விற்பனை செய்யும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இனிமேல், பொதுமக்கள் அனைத்துத் தபால் நிலையங்களிலும், எளிதாக வாங்கிக் கொள்ளலாம் என்றார்.
இந்த,மினி கூலிங் மிஷின் விலை 3,790 ரூபாய். இதுகுறித்து, மேலும் விவரங்களை, அருகில் உள்ள தபால் நிலையங்களில், பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியில், சென்னை நகர மண்டல தபால் துறை தலைவர் ராமானுஜன், தபால் துறை தலைவர்(வர்த்தக மேம்பாடு) குல்பீர் சிங், கோத்ரெஜ் நிறுவன பொது மேலாளர் சஞ்சய் லோனியல் உட்பட, பலர் பங்கேற்றனர்.
மலிவு விலையில் மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்களை வேண்டுமாயின் அஞ்சல்நிலையங்களில் கிடைக்குமாறு செய்யலாம். இது கடினமான செயல். எனவே, மச்களிர் சுய உதவிக் குழுக்களின் கண்காட்சியுடன் கூடிய விற்பனை நிலையத்தை ஒவ்வொரு தபால் நிலையத்துடன் நிரந்தரமாக இணத்து விடலாம். கஷ்டமில்லாமல் வருவாய் வரும்.
அஞ்சல்துறை அடுத்த ஆண்டு கணக்குச் சொல்லட்டும், எத்தனை கூலிங்மெஷின் விற்றார்கள் என்று. சுண்டைகைக்காய் கால் பணம் சுமைகூலி முக்காப் பணம் என்ற பழமொழியின் கதையாகவே அமையும்.
நீண்ட நாட்களாகவே- நாற்பது-நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகவே பலர் சொல்லிவருவது, அஞ்சல் துறையில் வங்கிச் சேவையினை முழுமைப்படுத்துவது என்பதாகும். இதே கருத்தினைத் தற்பொழுது மத்திய அரசும் பேசத் துவங்கியுள்ளது. அஞ்சல் அலுவலகம் இல்லாத ஊரில்லை என்ற நிலையில், துரித நடவடிக்கைகளில் இறங்கலாம். அஞ்சல் அலுவலகங்களை இழுத்து மூடவேண்டிய அவசியமும் ஏற்படாது. அஞ்சல் அலுவலகம் வங்கிச் சேவைகள் அனைத்தையும் அளிக்கலாம். வேலைவாய்ப்பும் பெருகும். மக்களும் பல பெறுவர். வங்கிகள் - அஞ்சல் அலுவலகங்கள் போட்டியால் நல்ல பலனே விளையும்.
புதிய முயற்சிகளில் அஞ்சல் துறை ஈடுபடுவது வரவேற்கத்தக்கதே!ஆனால் எண்ணித்துணிய வேண்டும்தான்!
ReplyDelete