ஒவ்வொரு மனிதர்களிடமும் குழந்தை தனம் ஒளிந்திருக்கும். அது அவ்வப்பொழுது தற்காலிகமாக வெளிப்பட்டு மறைந்துவிடும். ஆனால் கான்பூரைச் சேர்ந்த 63 வயது கொண்ட கோபால் கண்ணாவின் குழந்தைத்தனம் வெளிப்பட்டவிதம் வித்தியாசமானது. மற்றும் தொடர்கதையாயும் உள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக விளையாட்டு பொம்மைகளைச் சேகரிக்கும் குழந்தையாக இவர் வாழ்ந்து வருகின்றார். முதலில் கேலி செய்த இவரது உறவினர்களும், நண்பர்களும் பின்னர் அவர்களாகவ்வே இவரது முயற்சிகளுக்கு உதவிடத் துவங்கிவிட்டனர்.
பொம்மைகள், ரயில் இன்ஜின், கார்கள், இசைக் கருவிகள் , சின்னஞ்சிறு நினைவிச் சின்னங்கள், வன விலங்குகள் போன்றவை பல்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் சேகரித்துள்ளார். மேலும் பொம்மைகள் உலோகம், தங்கம், மரம், மார்பிள், ரோஸ்வுட், கிரானைட், மற்றும்களிமண் போன்றவற்றால் செய்யப்பட்டவகைளும் ஏராளமாக உள்ளன. பெரும்பாலான பொம்மைகள் பிரான்ஸ் அமெரிக்கா, சீனா, ஜப்பான் , இத்தாலி போன்ற 12க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவை. . இவற்றின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கும் மேல் என்பது வியப்பூட்டும் தகவல்.
மேற்படி 63வயதுக் குழந்தை கோபால் கண்ணா,உ.பி.,மாநிலம் கான்பூர் நகரில் உள்ள ஆசாத் நகர் பகுதியை சேர்ந்தவர் . பேங்க் ஆப் பரோடாவில் கணிப்பொறி இயக்குநராகப் பணியாற்றியவர். ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகளாகின்றன. மூன்று பேரக்குழந்தைகளிடம் இருந்து பொம்மைகளை உடைத்தெறியாமல் காப்பாற்றுவது சிரமமாக உள்ளதென்பதே அவர் நமக்குத் தரும் செய்தி.
ஊர்ச்சொத்தைக் கொள்ளை அடிக்காமல், வகிக்க்கும் பதவியால் சுகங்கள் தேடிக்கொள்ளாமல், வித்தியாசமான வகையில் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டு வாழ்ந்துவரும் கோபால் கண்ணா வாழிய நீடு!
Sunday, August 14, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.