Friday, August 12, 2011

சீனா வீட்டோ மூலம் இலங்கையைக் காப்பாற்றுமாம்

போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதம் ஐ.நா. வில் வந்தால், சீனா தன் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதனைத் தடுத்து நிறுத்தும் என இலங்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இறுதிக் கட்டப்போரின் போது, லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதுடன், எண்ணற்ற போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடந்ததால், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அண்மையில் சீனா சென்ற இலங்கை அதிபர் ராஜபக்ஷே மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீஸ் ஆகியோர் சீன பிரதமர் வென்ஜியாபோவை சந்தித்து பேசினர்.

இது தொடர்பாக நாடு திரும்பிய பின்னர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய பெரீஸ், போர்க்க்குற்றங்கள் குறித்து விவாதிக்க சர்வதேச நாடுகள் ஐ.நா., சபையில் அழுத்தம் தந்தால் அதனை சீனா தனது வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதற்கான உறுதிமொழியை சீன பிரதமர் வென்ஜியாபோ தங்களுக்கு அளித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

1 comments:

  1. சீனா மிக வேகமாக இலங்கையில் இராணுவரீதியாக காலூன்றி வருகிறது. இந்தியாவின் நிலமை படு மோசம் :(

    ReplyDelete

Kindly post a comment.