தமிழீழம் நாட்டை உருவாக்க போராடிய விடுதலைப்புலிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு தோற்கடிக்கப்பட்டனர்.
டக்ளஸ் தேவானந்தா, கருணா ஆகியோர் செய்த துரோகத்தால் விடுதலைப் புலிகள் இயக்கம் சிதறடிக்கப்பட்டது. அதன் பிறகும் வடக்கு-கிழக்கு இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்கு உரிமை கிடைக்கவில்லை. தமிழர்களுக்கு எல்லா உரிமையும் வாங்கி தந்து விடுவோம் என்று கூறிய காங்கிரஸ் தலைவர்கள் இப்போது ஊமையாக இருக்கிறார்கள்.
இத்தகைய சூழ்நிலைகளை பயன்படுத்தி தமிழர்கள் வாழும் பகுதிகளை இலங்கை அரசு சிங்கள மயமாக்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழர் நிலப்பகுதிகளில் 2,500 புத்த கோவில்களை கட்டி உள்ளனர்.
அதோடு பிரபாகரன் தங்கி இருந்த இடங்களில் அந்த சுவடே தெரியாதபடி அழிக்கிறார்கள். என்றாலும் பிரபாகரன் தங்கிய ஒரு பதுங்கு குழி மட்டும் சிங்கள அதிகாரிகளிடம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதோடு பிரபாகரன் தங்கி இருந்த இடங்களில் அந்த சுவடே தெரியாதபடி அழிக்கிறார்கள். என்றாலும் பிரபாகரன் தங்கிய ஒரு பதுங்கு குழி மட்டும் சிங்கள அதிகாரிகளிடம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இருந்து ஒட்டுக்கட்டான் செல்லும் வழியில் அடர்ந்த காட்டுக்குள் அந்த பதுங்கு குழி உள்ளது. வெளியில் சாதாரண வீடு போல தோற்றம் அளிக்கும் அந்த இடத்தில் ஆழமான பதுங்கு குழிகளை கொண்டுள்ளது.
இரும்பால் அவை அரண் போல உள்ளன. எந்த குண்டும் அந்த பதுங்கு குழியை துளைக்காது. இந்த பதுங்கு குழியை சிங்களர்கள் தினமும் பல்லாயிரக்கணக்கில் வந்து பார்த்து செல்கிறார்கள். இதையடுத்து இந்த பதுங்கு குழியை சுற்றுலா தலமாக மாற்றி பணம் வசூல் செய்ய சிங்கள அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
இதற்கிடையே மாவீரர் நாள் ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக விடுதலைப்புலிகளின் தலைமை செயலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மாவீரர் நாளை தாயக மண்ணில் எழுச்சியுடன் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
எனவே உலகமே வியக்கும் ஒப்பற்ற தியாகம் செய்த மாவீரர்களின் நினைவைப் புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் இதுவரை இல்லாத அளவுக்கு எழுச்சியுடன் நிகழ்த்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அர்மேனியா (ARMENIA)
OTTOMAN EMPIRE TURKEY 1915-1923 காலக் கட்டத்தில் அர்மேனியர் மீது இனப்படு கொலைத் தாக்குதலை நிகழ்த்தியது. இன்றைய இலங்கைத் தமிழர்களின் நிலைமையில் ,அன்றைய் ஆர்மேனியர்கள் உலகம் முழுவதும் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளனர். பலியானோர் எண்னிக்கை இரண்டு மில்லியனுக்கும் மேல் என்பது தகவல்.ஒட்டோமன் தலைநகர் கான்ஸ்டாண்டிநோபிளிலிருந்து அர்மேனிய அறிவுஜீவிகள் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட நாள், 24-04-1915. வரலாறு ரெட் சண்டே என்று கட்டியம் கூறுகின்றது ஆர்மேனியர்களது தியாகிகள் தினம், ஏப்ரல்,24.
இலங்கைத் தமிழர்களைப்போல் உலகம் முழுவதும் அர்மேனியர் பரவி உள்ளனர். அர்மேனிய இனப்படுகொலை நிகழ்வுகள் அவர்களின் நெஞ்சில் அழிக்க முடியாத வடுக்களாகத் தலைமுறைக்கும் தொடர்கின்றன.
இன்றளவும் 21-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அருங்க்காட்சியகங்கள், நினைவுத்தூண்கள், கட்டிடங்கள் உருவாக்கிக் கொண்டு வருகின்றனர்.(1938-2010 வரை.)
அதுபோன்று தமிழர்கள் பரவியுள்ள இடங்களில் எல்லாம் நினைவுச் சின்னங்களை எழுப்பவேண்டும். வருங்காலத்தில் என்றேனும் ஒரு நாள் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற உணர்வை அந்தச் சின்னங்கள் தூண்டிக் கொண்டே இருக்கும்.

//வருங்காலத்தில் என்றேனும் ஒரு நாள் வெற்றிபெற்றே தீரவேண்டும் என்ற உணர்வை அந்தச் சின்னங்கள் தூண்டிக் கொண்டே இருக்கும். //
ReplyDeleteமிகச்சரி!