ஊனம் உடலில் அல்ல! போலியோவை வென்ற சுழற்பந்தாளர்!
கர்நாடக மாநிலம் மைசூரில் 1945 மே 17-ல் பிறந்தவர், சந்திரசேகர். தந்தையின் பெயர் பகவத் சுப்ரமணியம்.
5 வயதில் போலியோவால் தாக்கப்பட்ட இவருக்கு வலது மணிக்கட்டு பாதிக்கப்பட்டது. கடின முயற்சியால் ஆர்வத்தின் படியே கிரிக்கெட்டில் ஈடுபட்டார்.
இடக்கைப் பழக்கம் காலப்போக்கில் வலக்கைகு மாறியது. வேகப்பந்தாளர் போல் செயல்பட்டார். லெக் ஸ்பின், கூக்ளி ஆகியவற்றைக் கூட வேகமாக வீசுவார்.
1971-ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 36 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்தியா வெற்றிபெறக் காரணியாய் இருந்தார்.
58 டெஸ்டுகளில் விளையாயுள்ள சந்திரசேகர் 242 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 16 முறை ஒரு இன்னிங்க்ஸில் 5 விக்கெட்டுக்கள். இரு முறை டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுக்கள் எடுத்துள்ளார். மேலும் 246 முதல்தர போட்டிகளில் விளையாடி 1063 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளார்.
1972-ஆம் ஆண்டின் சிறந்த வீரராக விஸ்டன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரது பெற்ற தாயினைப்ப்பற்றி ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடாதது எனது குற்றமல்ல.
17-03-2010 தினமணியையே சாரும்.
இருந்தாலும் வலது மணிக்கட்டு போலியோ ஊனத்தைக் காரணங்காட்டி முடங்கிக் கிடக்காமல் சிகரம் தொட்ட சுப்பிரமணியத்தயும் அவர்தம் பெற்றோரையும் ஊக்குவித்தோரையும் போற்றுவோம்.
அந்நிய நாடுகளில் 24 டெஸ்டுகளில் 100 விக்கெட் வீழ்த்திச் சிறப்புப் பெற்றவர்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.