Thursday, March 18, 2010

முடிவு தெரியாத அரசியல் பணங்களில்-பாதுகாப்பற்ற பள்ளிக் குழந்தைகள்!

சமச்சீர்க் கல்வி வந்தால் நல்லதுதான்! ஆங்கிலப் பள்ளிகளின் போராட்டங்கள் எந்த அளவிற்குத் தோற்கடிக்கப்படும் என்பது ?

அணுவிபத்து நஷ்ட ஈடு மசோதா தீவிரமாக எதிர்க்க பா.ஜ்.க். இடதுசாரிகள் முடிவு. அயல் நாட்டு நிறுவனம் 300 கோடிக்கு மேல் நஷ்ட ஈடு தர வேண்டியதில்லை என்ற மசோதா மனித உரிமை மீறிய செயல்! முடிவு..?
போபால் விஷவாயு வழக்கு சிலருக்கு நினைவுக்கு வரக் கூடும்.

மேலே காட்டப்பட்டுள்ள வேன்களில் அளவுக்கு மீறி ஏற்றிச் செல்லப்படும் மாணாக்கருக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், பயணித்த அனைவருக்கும் சத்தியமாகக் காப்பீடு கிடைக்காது.வேனில் சட்டப்படி அனுமதிக்கபடும் மாணவர்களுக்கு மட்டுமே காப்பீடு கிடைக்கும். இதில் அக்கறை காட்ட யாரும் இல்லை. தினமணி 18-03-2010-ல் படத்துடன் சுட்டிக் காட்டியுள்ளது.

தினமணிக்கு ஓர் வேண்டுகோள்! தினமணியே முன்வந்து பொதுநல வழக்குத் தொட்ர வேண்டும் இளந் தளிர்களுக்காக!

மக்கள் பிரதிநிதிகளுக்கு தமிழ்நாட்டுக்கு இந்தி தேவையில்லை என்று சொல்வதற்கும், அணு விபத்து ஈடு மசோதா எதிர்ப்பு, முல்லைப் பெரியார் குழு மறுப்பு, ஆட்சியில் இருந்து கொண்டோ/ஆதரித்துக் கொண்டோ விலைவாசி எதிர்ப்புப் பேரணி-(தொண்டர்களின் மன் உணர்வுகளுக்குத் தீனி போட) என்று சரியான முடிவை எட்டாமல் அரசியலில் பயணித்துக் கொண்டே இருப்பார்கள்.
அந்தோ அவமானம்!

0 comments:

Post a Comment

Kindly post a comment.