India's National Magazine from the publishers of THE HINDU )
நிழற்படக் கலையில் தேர்ச்சி பெற்றார். மேலும் நியுயார்க்கில் மேல்படிப்பும் படித்தார். இந்தியா திரும்பும் பொழுது, இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, ஃப்ரான்ஸ், முதலிய நாடுகளுக்கும் சென்று வந்தார். பயண அனுபவங்கள் கட்டுரைகளாயின. உலகம் சுற்றும் தமிழன் என்னும் பெயரில் 1940-ல் பயண நூலாக வெளியிடப்பட்டது.
தன வணிகன் என்று நகரத்தாரால் ரங்கூனில் வெளியிடப்பட்ட நூலுக்கு ஏ. கே. செட்டியார் ஆசிரியராக இருந்தபோது அவருக்கு வயது 20 தான்.! 1943 முதல் 1983 வரை இவர் வெளியிட்டு வந்த குமரிமலர் மாத இதழ் அப்போது என் போன்ற மாணாக்கராலேயே விரும்பிப் படிக்கப் பட்டது.
ஜப்பானில் சில நாட்கள், உலகம் சுற்றும் தமிழன், ( பாட நூலாகவும் இருந்தது.) , மலேசியா முதல் கனடா வரை, பிரயாண நினைவுகள், அமெரிக்க நாட்டிலே, ஐரோப்பா வழியாக. குடகு முதலியனவற்றைஎழுதியுள்ளார்.
தனது வாழ்க்கையில் 4 லட்சம் மைல்களுக்கு மேல் பயணம் செய்துள்ளார். பரண்களின் மீது கிடைத்த நூல்களச்சேகரித்து குமரிமலரில் பிரசுரம் செய்துள்ளார்.
குமரிமலருக்கு இணையான நூல் இன்றளவும் வந்ததில்லை என்பதே உண்மை
.
தமிழ் விக்கிபீடியா மூலமாக A.K. A.கருப்பன் செட்டியார் என்று பெயரைத் தமிழில் தெரிந்து கொள்ள காஞ்சிபுரம் AKR உதவினார். -227224947/9789581797
0 comments:
Post a Comment
Kindly post a comment.