Tuesday, March 16, 2010

புண்பட்ட நெஞ்சங்களுக்கு பண்படுத்தும் தீஞ்ச்சுவைத் தண்ணீராகத் திகழும் அந்தோணி முத்து வாழ்க்கையிலும்சுடர்விளக்காகட்டும்!

அழகி விஸுவின் அறிமுகத்துடன்அந்தோணியுடனான நட்பு நெருக்கமானது. அசாத்தியமான தன்னம்பிக்கையும், தன் உழைப்பில் சம்பாதித்து வாழ வேண்டும் என்ற திடமான எண்ணமும் மிக்கவர் பழக்கத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது. மனச் சோர்வான பல சமயங்களில், அவருடன் பேசி மனத்தெளிவடைந்திருக்கிறேன்.

சமீபத்திய கல்கி சுயமுன்னேற்றச் சிறப்பிதழில் (07.03.2010) அந்தோணியின் கட்டுரை வெளிவந்திருக்கிறது. அதை ஸ்கேன் செய்து இட்டிருக்கிறேன். கிளிக் செய்து பெரிதாக்கி வாசிக்கவும்.

இலக்குகள் பற்றி அந்தோணியைக் கேட்டால்,
"தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம் இவற்றில் அடிப்படையிலான துறையில் சுயபரிசோதனைகளை சகமானுடத்துடன் பகிர வேண்டும். கேட்பவர்களுக்கெல்லாம் இல்லை என்று சொல்லாது கொடுக்கும் நிலைக்கு உயர வேண்டும்" என்கிறார்.
என்ன ஒரு உயர்வான சிந்தனை! வாழ்க!

1 comments:

  1. காயங்களுக்கு நன்றி என்னும் தலைப்பில் பாதி உடலுடன் வாழ்ந்துவரும் அந்தோணி முத்துவிற்கு மாவட்ட/மாநில/மத்திய அரசுப்பொறுப்பின் குறுப்பிட்ட துறைகளில் உள்ள அதிகாரிகள்/அரசியல்வாதிகள் சுய கௌரவம் இழக்காமல் வாழ்வதற்குறிய வழிகளைச் செய்யவேணடும்.வசிப்பது ரெட்கில்ஸ் பகுதி. முகவரி 5/96 சேரன் தெரு,கே.கே.நகர், பம்மது குளம்,600002. 044/26323185. 9381455799 திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள் கவனத்திற்கு இது வலைப்பதிவன்பர்களால் கொண்டு செல்லப் பட வேண்டும்.

    ReplyDelete

Kindly post a comment.