Tuesday, March 16, 2010

எம்.கே.டி. பாகவதரும் திருச்சி திருவெறும்பூர் பாய்லர் தொழிற்சாலையும்!














இடப்புறம் உள்ளது திருவெறும்பூர் பாய்லர் தொழிற்சாலையின் நுழைவாயில்!

வலப்புறம் உள்ளவர் ஏழிசை மன்னர் எம்.கே.டி.பாகவதர். என்ன சம்பந்தம்?

இரண்டாம் உலக யுத்தத்தின் போது இந்தியத் தலைவர்களின் ஆணைப்படி, சிவப்புக் கட்சிக் காரர்கள் உள்பட அனைவரும் ஆங்கிலேயரை ஆதரித்தனர். பாகவதரும் தன் பங்கிற்கு எக்கச்சக்கமாக யுத்தநிதி வசூல் பண்ணிக் கொடுத்தார்.

யுத்த வெற்றிக்குப்பின் ஆங்கில அரசாங்கம் தந்த திவான் பகதூர் பட்டத்தையும், 300 ஏக்கர் நிலத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்.

அந்த 300 ஏக்கர் நிலத்தில்தான் பிற்காலத்தில் திருவெறும்பூரில் சுதந்திர இந்தியாவிற்கு டாலரை வருவாயாக்கித்தரும் பாய்லர் தொழிற்சாலையாக உருவாகிப் பரிணமிக்கிறது.

தேசபக்திக்குக் கூலிவாங்க மறுத்தவரை, மக்கள் கடமையாற்ற வந்தவர்கள் (?) தன்னத்தானே பாராட்டிக்கொள்ளும் ..................?

ஈ.வே.ரா. வுக்குப் பெரியார் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

எம். எம். தண்டபாணிதேசிகருக்கு இசையரசு என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

எம். கே. டி. பாகவதருக்கு ஏழிசை மன்னர் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?

சமூகசீர்திருத்தம்,

தமிழிசைவளர்ச்சிக்காகப்பாடுபட்ட

தஞ்சைகருந்தட்டாங்குடி


சரஸ்வதி என்ற தர்மாம்பாள் என்ற மாதரசிதான்!

பந்தநலூர், ச. இராசதுரை, வேலாயுதம்பாளையம் சிவ.கனகசபை ஆகியோர் தினமணி மூலம்- (15 & 16 -03-2010
) இந்த உண்மையை நமக்குத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி!

0 comments:

Post a Comment

Kindly post a comment.