Saturday, January 9, 2010

சென்னை: மண்ணுக்குப் பயனாகும் மனிதர்கள்!




மந்தைவெளி, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், சேத்துப்பட்டு, வடபழனி, இராயபுரம், அடையாறு மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் அதிகாலை வேளையில் ஒரு காட்சியினைச் சிலர் கண்டிருக்கலாம்.

மூன்று சக்கர வண்டியில் சின்னஞ்ச்சிறு செடிகளையும், விதைகளயும் வைத்துக் கொண்டு சாலையோரங்களில் தூவிக் கொண்டும், நட்டுக் கொண்டும் செல்லும் காட்சிதான் அது!

யார் அந்த இருவர்? சென்னை மயிலாப்பூர் ஸ்ரீரெங்கா ஆஸ்பிடலைச் சேர்ந்த டாக்டர்.ஆர்.மாதவன், ஒருவர்! ரிசர்வ் வங்கியில் டெப்டி ட்ரசுரர் ஆகப் பணியாற்றி பணிவிடை பெற்ற வி.சுப்பிரமணியன் மற்றொருவர்!

மந்தைவெளிப் பகுதியில் 1990-களில், இவர்கள் துவக்கிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம் சக்கைப் போடு போடுகின்றது! சக்கைப் போடென்றால் வெற்றி நடை போடுகிறதென்றுதானே அர்த்தம்?

20000 செடிகளுக்கு மேல் வளரச் செய்து சென்னையின் சாலையின் இரு பக்கங்களையும் பசுமையாக்கியிருக்கின்றார்கள்.

இதற்கு இவர்கள் பிறர் உரிமையைத் தட்டிப் பறிக்கவுமில்லை; பெயரைக் கூட்டியொ குறைத்தோ எந்த மாநாட்டையும் கூட்டவில்லை: எந்த வேலையையும் யாருக்கும் பங்கீடும் செய்யவுமில்லை. மாநாடு, வேலைப் பங்கீடு என்ற வார்த்தைகள் உங்களுக்கு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நினைவு படுத்தினால் இந்த வலைப் பதிவருக்கு மகிழ்ச்சியே!

இவர்கள் இலவசமாக வழங்கிய செடி-விதைகள் மட்டுமே ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்ட்டன. இது உண்மை; வெறும் வார்த்தை இல்லை. உங்கள் பகுதியிலும் இதனை நடைமுறைப் படுத்திட ஆசையா?

சுழற்றுங்கள் எண்களை! 9840472623 அல்லது 044/24938368

இத்தகையவர்கள்தான் பூமிக்குப் பயனாகும் மனிதர்கள்; மற்றவர்கள் சுமை/பாரமானவர்கள், பூமிக்கு! சரிதானே, வலைப்பூ நேசிப்பு நாயகர்களே?

0 comments:

Post a Comment

Kindly post a comment.