பொது இடத்தில் கணவன் மனைவி முத்தம் கொடுப்பது ஆபாசமல்ல!-டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
04-09-2008- டெல்லி துவாரகா மெட்ரோ ரயில் நிலையம் அருகில்! சிரித்துப் பேசிக் கொண்டிருந்த இளஞ் ஜோடி முத்தம் கொடுத்ததாகத் தெரிகின்றது. பார்த்த சில புண்ணியவான்கள் போலீஸில் புகார் செய்தனர். ஜோடி கைது செய்யப்பட்டனர்; வழக்கும் பதிவானது. பின்னர் போலீஸ் ஸ்டேஷனை விட்டு ஜோடி வெளியேறியது.
ஜோடிகள் கோர்ட்டில் கொடுத்த தன்னிலை விள்க்கம்:- " நாங்கள் காதலர்கள்; வீட்டில் எதிர்ப்பு.எங்கள் திருமணம் ஆர்ய சமாஜ் கோயிலில் திருமணம் நடந்தது. திருமணத்தைப் பதிவு செய்யும் வரை தனித் தனியே வாழ்வதென்று தீர்மானித்தோம். இச்சூழலில் துவாரகா மெட்ரோ நிலையத்தில் சந்தித்தோம். பேசிக் கொண்டிருந்தோம், அவ்வளவுதான்! செல்போனில் படமெடுத்தோம். மற்றப்படி முத்தம் எதுவும் கொடுத்துக் கொள்ளவில்லை."
நீதிபதியின் தீர்ப்பும் வியப்பும்:- "போலீஸ் பதிவு செய்த வழக்கிற்குத் தடை விதித்தார்.புது மணத் தம்பதிகள் பொது இடத்தில் முத்தம் கொடுப்பது ஆபாசம் அல்ல.திருமணம் ஆனவர்கள் என்பது தெரிந்த பின்பும் போலீசாரின் நடவடிக்கை எடுத்தது அதிர்ச்சியாக உள்ளது."
போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்த பொதுமக்களும், நடவடிக்கை எடுத்த போலீசாரும் இதில் முத்தத்தில் காட்டிய அக்கறையைச் சமூகப் பிரச்சினைகளிலும் காட்டலாமே?
0 comments:
Post a Comment
Kindly post a comment.