Saturday, January 9, 2010

பி.எஸ்.என்.எல்.- இன்டர்னெட்.- அரசு நிறுவனம் மக்களை ஏமாற்றலாமா?





பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஓர் பொதுத்துறை நிறுவனம் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாகும்.இன்டர்னெட் சேவையில் அது முன்னிலை வகிப்பது சந்தோஷமான விஷயம்.

ஜெனரல் ஹோம் பிளான்ஸ்-ல்- ஹோம் 250 என்றொரு திட்டம் இருக்கின்றது. மாதத்திற்கு இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு இன்டர்னெட் என்பது மகிழ்ச்சிதான்.அதுவும் ஆண்டுக் கட்டணத்தை மொத்தமாகச் செலுத்திவிட்டால், 3000 ரூபாய்க்குப் பதிலாக 2500 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதுமானது. அதிலும் 500 ரூபாய் மக்களுக்கு லாபமே.

ஆனால், சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடிக்கும் வேலைதான்.அப்பாவி மக்களை ஏமாற்றும் வேலையை அரசு நிறுவனம் செய்வது வேதனை அளிக்கின்றது. எப்படி என்றால்,
1 G.B. வரை பயன்படுத்தினால் மட்டுமே இந்தக் கட்டணம். அதற்குமேல் பயன்படுத்தும் ஒவ்வொரு M.B.-க்கும் 90 பைசா செலுத்த வேண்டும். 1024 MB கொண்டது 1 GB ஆகும். அப்படியானால். 1 GB பயன்பாட்டிற்கு 900-ம் ரூபாய் வசூலித்து விடுகின்றது, பி.எஸ்.என்.எல்.! மக்கள் செலுத்தும் மொத்தத் தொகை ரூபாய் 1150/-(900+ 250=1150) இது எந்த வகையிலும் நியாயம் இல்லை. இது ஒரு பகற் கொள்ளையே ஆகும்.

இது போன்ற சூழல் உருவாகும் பொழுது, அரசு நிறுவனமே, மக்களுக்கு பயனளிக்கத்தக்க வகையில் குறைவான கட்டணத்தை வசூலிக்கும் பிறிதொரு திட்டத்திற்கு மாற்றி உதவுதல் அவசியம். 500 ஹோம் பிளானில் சேர்ந்தவர் 2.5 GB பயன்பாட்டிற்கு ரூபாய் 500/- கட்டணம் செலுத்தினால் போதும்.


250 பிளானில் சேர்ந்துவிட்ட ஒரே காரணத்திற்காக 2 GB பயன்படுத்தியவர் 1150/- செலுத்துமாறு நிர்ப்பந்திப்பது எந்த வகையில் பார்த்தாலும் சரியில்லை.

எனவே, எந்தக் கட்டணம் வசூலித்தால் மக்களுக்கு லாபமோ அந்தக் கட்டணத்தை மட்டுமே பி.எஸ்.என்.எல். வசூலிக்க வேண்டும்.இன்டர்னெட் இல்லாத தொலைபேசி உபயோகிப்போருக்குக் காட்டப்படும் கரிசனம்/அக்கறை, இன்டர்னெட் பயனாளிகளிடமும் காட்டுதல் வேண்டும்.


உடனடியாக இதில் உரியவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.



முக்கியக் குறிப்பு.

07-07-2009-ல், காலை 6.30. திருச்சியிலிருந்து சென்னை நோக்கிப் பயணம். பல்லவன் குளிர் சாதன நாற்காலிப் பெட்டி. நினைவில் வாழும் நாராயணன் என்ற உயர் அதிகாரியின் மருமகன் எஸ். கிருஷ்ணகுமார் சொன்ன கருத்தின் பிரதிபலிப்புத்தான் இந்தப் பதிவு. நான் அந்த உயர் அதிகாரி நாரயாணனிடம் சேர்ந்து பணியாற்றியவன் என்பதும் ஒரு தகவல்.
இந்தப் பதிவினைப் படித்தவருள் இருவர் கருத்தினை ஆதரித்துள்ளனர். ஒருவர் திட்டத்தைப் பார்த்து மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்றார். BSNL- கட்டண விபரங்கள் தலையைச் சுற்றுகின்றன. எல்லோராலும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எளிமைப் படுத்திடல் அவசியம்.
எல்லோரும் குரல் கொடுத்தால் நிலைமை நிச்சயம் மாறும். தவறைத் திருத்திக் கொள்வதுதானே மனித இயல்பு? ஆடித் தள்ளுபடி விற்பனைக்கும் BSNL கட்டணத்திற்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது நியாயம்தானே?

NOTE-: 1 GB = 1024 MB

1 MB = 1024 KB

இதன் நகல் சென்னைப் புறநகர் ஒன்றில் உள்ள டெலிபோன் எஃஸ்சேஞ்ச்சில் சேர்க்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு நல்ல காலம் பிறக்கும் என்று எதிர்பார்ப்போம்.

மீண்டும் ஒரு குறிப்பு:-

உண்மை சுடும் என்பார் ஜெயகாந்தன்! தகவல் உரியவர்களைச் சென்றடைந்து விட்டது என்பது உறுதி ஆகிவிட்டது. ஒருவேளை இந்த கட்டண அட்டவணையின் மூளைக்குச் சொந்தக்காரராய் இருக்கக் கூடுமோ என்னவோ, கோபம்/வெறுப்பு வெளிப்படுகின்றது வார்த்தைகளில்!

BSNL ஓர் அரசு நிறுவனம்! மக்கள் சேவையே மகேசன் சேவையென இயங்க வேண்டிய நிறுவனம். மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி லாபம் பார்க்கக் கூடாதென்பதுதான் எமது நோக்கமே தவிர பிறிதொன்றுமில்லை பராபரமே!

தாங்களாக மாறினால் எல்லோருக்குமே நல்லது. இல்லையென்றால் கொஞ்சம் ENERGY-யும். பேப்பரும், பணமும் செலவாகும். அவ்வளவுதான்.

22 comments:

  1. ada ponka sir
    ivakaluku yethavathu cinema karanka kastapatta mattum than therium

    ReplyDelete
  2. ரொம்ப நாளா இதிலே மாட்டிக்கிட்டு முழிச்சுட்டு இருந்தேன்!

    ReplyDelete
  3. I don't think it is unfair. Did you read the plan offer document before you signed the contract? If you feel you need more download, go for a higher plan.

    ReplyDelete
  4. I think it is a stupid post... If you need more usage, go for higher plans... It is clearly mentioned in plan document that the free usage is only 1 GB.. Why you used 2 GB and saying BSNL cheating..

    ReplyDelete
  5. hello, all isp are having plans like this..i think BSNL is only cheap..But their service is worst..In my case, i have airtel 999 plan-unlimited. i am having this plan for last 2 years..recently i checked their plans, i surprised...bcoz there is no 999 plan..now it is 735 plan..but airtel did not informed about this plan charges reduction and continue to collect the old rates.

    ReplyDelete
  6. உங்கள் கருத்து உண்மையே... மோசமான சேவை, லஞ்சம் என தனியாரை நோக்கி வாடிக்கையாளரை தள்ளுவதே நோக்கம். மக்கள் புரிந்து கொள்ளும்வரை கொள்ளைதான்.

    ReplyDelete
  7. BSNL-தான் சிறந்தது. தொலைபேசியாய் இருந்தாலும் சரி, இண்டர்னெட் ஆக இருந்தாலும் சரி BSNL -தான் முதலிடம்! ஆனால், சேவைத் திறம் போதாது. இன்டர்னெட் குறைபாடுகளைச் சரிசெய்யும் பொறுப்பு தனியாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அவர்களது சேவை மிகவும் மோசம். எப்படித்தான் BSNL-kku இப்படிப் பட்டவர்கள் கிடைக்கின்றார்களோ தெரியவில்லை. மோடம் குறை தீர்க்க நாம்தான் மோடத்தை தொ.நிலையத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்.கட்டணச் சீரமைப்பு, சேவைததர மேம்பாடு முதலியவற்றை உடனடியாகக் கவனம் செலுத்தினால் BSNL வளரும். வேறு என்னத்தைச் சொல்ல?

    ReplyDelete
  8. அணணாமலையான் சொல்வதிலும் கூட உண்மை இருக்கலாம். நுனி மரத்தில் இருந்துகொண்டு அடிமரத்தை வெட்டும் வேலையை BSNL ஊழியர்கள் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு. ஆனால், டெலிகாம் தனியார் வசமானபோது BSNL Tower குறித்த படங்களை-தகவல்களை தனியாருக்குத் தாரை வார்த்துப் பாக்கெட்டை நிரப்பிக்கொண்ட அதிகாரிகளும், டிராப்ட்ஸ்மேன்களும் கூட உண்டென்று அவர்களில் சிலரே சொல்லக் கேள்வி.அங்கீகரிக்கப்பட்ட/அங்கீகரிக்கப் படாத ஊழியர்/ஆபீசர் சங்கங்களுக்கும் BSNL-ஐக் காப்பாற்றும் பொறுப்பு உண்டு. இது இந்திய அரசுக்குப் பொன் முட்டையிடும் வாத்து. ஆபத்து வருமுன் காத்திருக்க வேண்டும்.ஆபத்து வந்தபின்னும் மௌனிப்பது அண்ணாமலையாரின் கருத்துக்கு வலுச் சேர்க்கின்றது. உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வந்துதானே தீரவேண்டும்? ஆழ்ந்த
    வருத்தத்துடன்....

    ReplyDelete
  9. first I used BSNL ( 128 kbps).
    first month I got Rs.4000 bill for downloading and internet usages.cause of I surrendered the phone and net connection.
    then I got new net connection from a private provider. same bandwidth ( 128 kbps).only Rs.500.unlimited download and usage.
    now the readers may weigh the both.

    ReplyDelete
  10. தங்கள் பதிவு தவறானது.BSNL 256 kbs, 384 Kbs, 512 Kbs-களில் கிடைக்கின்றது. எதுவும் BSNL-க்கு ஈடாகாது. சிலர், ஒரு தனியார் நிறுவனத்தின் பாக்கட் இன்டர்னெட் தொடர்பை வாங்கிக் கொண்டு, blue tooth மூலம இன்டர்னெட் பயனீட்டாளராய் உள்ளனர். அது குறித்த தகவல்களைத் திரட்டி வருகின்றேன். அதுதான் லாபம் என்றால் தயக்கமின்றித் தனியாகப் பதிவு செய்வேன். தற்போதைய நிலையில் எனக்குத் தெரிந்தவரை BSNL-தான் எல்லாவற்றிற்கும் சிறந்தது. அதன் நிர்வாகம் சேவைத் தரத்தை மேம்படுத்த வேண்டும். 108 போன்று இயங்க வேண்டும். ஆனால். 108 சேவை தனியாரால்தான் சிறப்பாகச் செயல்படுகின்றதென்பதே உண்மை. ஹைதராபாத் கைலாஷ் தன் கருத்தை மார்றிக் கொள்வார் என்று உறுதியாக நம்புகின்றேன்.

    ReplyDelete
  11. மாற்றிக் கொள்வார் என்று படிக்க வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  12. நண்பர் சேது அவர்களுக்கு ,
    நான் BSNL உபயோகப்படுத்தியது நான்கு வருடங்களுக்கு முன்பு. அந்த மிக அதிக கட்டணத்தால் தெறித்து சரண்டர்
    செய்தவன்தான் .பிறகு ஒரு வருடம் கழித்து அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் இணைப்புதான் .
    ஆகவே BSNL பற்றிய எனது அறிதல் மூன்று ஆண்டுகளுக்கு முன்பட்டது.
    ஒரு விஷயம் .தற்போது மாதம்ரூ. 500 செலவில் 6 GB to 8 GB டவுன்லோடு செய்கிறேன். இது BSNL ல் சாத்தியமா என்று தெளிவு படுத்தினால் உதவியாக இருக்கும்.அவர்கள் சேவை மக்களுக்கு லாபமாக இருந்தால் தானாகவே
    அனைவரும் மாறிவிடுவார்கள் .
    usefulness and efficiency only can reap the benefits (like telecom and computer sector) .
    people and time will decide that.

    ReplyDelete
  13. http://www.bsnl.co.in/service/dataone_tariff.htm

    மாதம் என்றால் ரூபாய் 750/-. அதுவே ஆண்டு முழுவதும் மொத்தமாகச் செலுத்தினால் 7500/- மட்ட்டுமே. 256 KBPs Download அளவில்லாதது. எனவே BSNL தான் சிறந்தது. சேவைத் திறன் மேம்பாடு அடைந்தால் மிகவும் நல்லது.
    ஓர் அதிரடி நடவடிக்கையை BSNL மேற்கொண்டால், Bsnl-ஐ யாருமே எட்டிப் பிடிக்கமுடியாது. தொலைபேசி வாடகை கிடையாது. பயன்படுத்தும் அழைப்புகளுக்கு மட்டுமே காசு வசூல். இலவச அழைப்புக்களும் கிடையாது என்றும் சொல்லலாம். இணைப்புகளும் இலவசமாகக் கொடுத்தால் கூட நஷ்டம் வர வாய்ப்பில்லை. இது தொலைபேசிக்கு. சரவணா ஸ்டோர்ஸ் பார்முலா. கைலாஷ் அவர்களே தைரியமாக மாறுங்கள் BSNL-க்கு. நிச்சயம் இந்த வேகம் வேறு எதிலும் இல்லை.அன்புடன், சேது. 13.30 hrs.

    ReplyDelete
  14. Unlimited Home Plans
    Particulars Home Flexi 350 Home UL 750 Home UL 750 Plus Home UL 1350 Home UL 1350 Plus

    Bandwidth
    (wherever technically feasible)
    256 kbps 256 kbps 256 kbps 512 Kbps 512 Kbps

    Monthly Charges (Rs)
    350 750 750 1350 1350

    Annual Charges (Rs)
    NA 7500 7500 13500 13500

    Free Download/Upload Limit (GB) per month
    1.8 GB Unlimited Unlimited Unlimited Unlimited

    Additional Usage Charges/MB beyond free download/upload limit (Rs)
    0.80 NA NA NA NA

    Free E-mail IDs/Space (Per E-mail ID)
    NA 2/5 MB 2/5 MB 2/5 MB 2/5 MB
    Night Unlimited (0200-0800 Hrs) NA NA NA NA NA
    Fixed Monthly Charges for Telephone (Rs) As per Existing Plan As per Existing Plan NIL As per Existing Plan NIL
    Free Calls NIL NIL
    Charges Beyond Free Calls Limits (Rs) 1.00 0.80
    Maximim Usages Charges for BB inclusive of FMC Rs.1500 NA NA NA NA

    ReplyDelete
  15. நண்பர் சேது அவர்களுக்கு ,
    இதில் எனக்கு ஒத்து வரக்கூடியது என்று பார்த்தால் 256 kbps Monthly Rs.750 or Annual Rs.7500 என்பதுதான்.
    நீங்கள் கொடுத்த BSNL லின்க்கையும் பார்த்தேன்.செக்யூரிட்டி டெபாசிட் ,மோடம் டெபாசிட், மோடம் வாடகை
    இதெல்லாம் கேட்டிருக்கு .மோடம் கண்டிப்பாக வாங்கனுமாம்.installation சார்ஜ் வேறே.
    அதே நேரம் இங்கே கொஞ்சம் பாருங்க .

    http://www.beamtele.com/index.php?option=com_content&view=article&id=49&Itemid=43

    இங்கே ஹைதராபாத்தில் அதே 256 kbps Monthly Rs.600 . Annual என்றால் Rs.6000 .(No Installation charges for Annual Packages.) மோடம் தேவையில்லை. cell-லில் செகண்ட்டுக்கு ஒரு பைசா tariff இருக்கும்போது எதுக்கு 80 பைசா tariff-ல் landline ?
    இது மாதிரி சில கேள்விகள் இருக்கு.

    நீங்கள் ஒருவேளை BSNL ஊழியராகவோ அல்லது அவர்களுக்கு ரிலேஷனாகவோ இருந்தால் ,
    என்னால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
    But true is true.
    எதுக்கும் நேர்ல போய் BSNL - ல் ஒருதடவை கேட்கிறேன்.

    ReplyDelete
  16. எனக்கு வருத்தமே கிடையாது. ஒரு பொதுத் துறை நிறுவனம்- அரசு நிறுவனம் தனியார் நிறுவனத்தை விட சிறந்து திகழ வேண்டும் என்பதுதான் ஆசை.அமெரிக்காவை முதலாளித்துவப் பூச்சாண்டி என்று பேசிய பல BSNL தொழிற்சங்கத் தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் தற்போழு இருப்பது அமெரிக்காவில்தான்! இவர்கள் பறப்பதும் திரும்புவதும் நிலங்களில் காசு போடுவதும் அமெரிக்க டாலர் வருமானத்தில் தான்! ஏன்? பொது அமைப்புக்கள் சொப்த்து சேர்க்கக் கூடாது என்று வகுப்பு எடுத்தவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடுக்குமாடி கட்டிடங்கள்- நிரந்தர வருமானம் என்று மல்லுக் கட்டத் துவங்கியுள்ளபோது மக்களுக்கு எது குறைந்த செலவில் நல்லதைத் தருகின்றதோ அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். BSNL -ல் வேலையை உதறிவிட்டு, தனியார் தொலைதொடர்பிற்குக் காவடி தூக்கிய பல உயர் அதிகாரிகளின் தேசபக்தி எல்லாம் நிகழ்ந்த -நிகழும் கதைகள்தான்! அது சரி அந்த செகண்டுக்கு 1 பைசா லாபம் என்றால் அது விபரம் தெர்ரிவியுங்களேன்? HYD vanhthaal சந்திக்க வாய்ப்புக் கிடைக்குமா? எனது e-mail முகவரிக்கு கடிதம் எழுதினால் மகிழ்வேன்.

    ReplyDelete
  17. நண்பர் சேது அவர்களுக்கு ,
    //Bsnlஓர் அதிரடி நடவடிக்கையை BSNL மேற்கொண்டால், Bsnl-ஐ யாருமே எட்டிப் பிடிக்கமுடியாது//
    I accepted 100% with this.

    //அமெரிக்காவை முதலாளித்துவப் பூச்சாண்டி என்று பேசிய பல BSNL தொழிற்சங்கத் தலைவர்களின் வாரிசுகள் எல்லாம் தற்போழு இருப்பது அமெரிக்காவில்தான்! இவர்கள் பறப்பதும் திரும்புவதும் நிலங்களில் காசு போடுவதும் அமெரிக்க டாலர் வருமானத்தில் தான்!//

    நம்முடைய குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் .அவர்கள் வெளிநாட்டில் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறில்லை.அந்த பணத்தை இந்தியாவில் முதலிடு செய்வதும் தவறில்லை.
    ஆனால் வேலை செய்யும் நிறுவனத்தின் நலனை புறக்கணிப்பதுதான் தவறு.BSNL ல் சின்சியரானவர்களும் இருக்கிறார்கள் .(நான் சந்தித்து இருக்கிறேன் ).அவர்கள் வெறும் 5 % என்பதுதான் வருத்தம் தரும் விஷயம் .

    ReplyDelete
  18. இதே போன்று அரசு நிறுவனம்தான் BHEL .அவர்களின் பாய்லர்கள் ஜப்பான், சூடான் போன்ற உலகநாடுகளால் விரும்பிவாங்கப்படுகிறது.இதை சர்வதேச லெவலில் போட்டியிட்டு ஆர்டரை வெல்கிறார்கள் என்பதுதான் ஆச்சர்யம்.
    BSNL ல்ம் கூட அப்படி மாறமுடியும். இன்றும் நகரம் முதல் கிராமம் வரை BSNL ல்கே உள்கட்டுமானம் வலுவாக உள்ளது.
    வருடந்தோறும் சேல்ஸ்,லாபம்,இணைப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றில் 15 % கட்டாயம் உயர்வு இருக்கவேண்டும் என்றும் இந்த டார்கெட் சாதிப்பவர்களுக்கே பணிஉயர்வு, ஊதியஉயர்வு ஆகியவற்றில் முதலிடம் என்றும்,
    இனி பணிஉயர்வு, ஊதியஉயர்வு ஆகியவை திறமை ஒன்றை மட்டுமே வைத்து வழங்கப்படும் என்றும்
    ஜாதி, மதம்,இனம்,மாநிலம்,வயது ஆகியற்றை பொறுத்து அளிக்கப்படாது என்று தங்களுக்குள் உறுதி கொண்டு செயல்பட்டால் இரண்டு வருடம் கழித்து முதலிடம் வர வாய்ப்புண்டு.

    ReplyDelete
  19. 1 பைசா tarif பற்றி கேட்டீர்கள் . ஏர்டெல், ஐடியா, ரிலையன்ஸ் ,வோடாபோன் என்று பலரும் பல வகை validity ,பல வகை லோகல், எஸ்.டி.டி. talk time .என்று குழப்பும் plan கள்.
    detail table பார்த்தாலே தலை சுற்றும்.
    சாதாரணமாக ஒரு local call ரூ 1 .STD ரூ 1 .50 ,
    இதில் call என்பதை பொறுத்தவரை நாம் call buttun அழுத்தியவுடன் ரூ 1 . ஆகிவிடுகிறது .
    அதாவது 60 sec க்கு 100 paisa . அ -து sec க்கு சுமார் 1 .67 paisa .
    61 வது sec சார்ஜ் ரூ 2 .ஆகிவிடுகிறது

    இந்தநிலையில் தான் TATA DOCOMO வந்தது. life time incoming, local and STD same charge.
    sec க்கு 1 பைசா, அ -து நிமிடத்திற்கு 60 பைசா,
    பேசியதற்கு மட்டும் சார்ஜ் .அதாவது போன செய்தவுடன் 10 sec ல் பேசி cut செய்தால்
    10 பைசா மட்டுமே .அது ஹைதராபாத் ஆனாலும் சென்னை ஆனாலும் 10 பைசா தான் .
    நல்லாருக்கு இல்லையா ?
    அதனாலதான் நிறைய பேரு TATA DOCOMO க்கு மாறினாங்க.
    ஆனா பழைய நம்பர்தான் நிறைய நண்பர்களுக்கு ,உறவினர்களுக்கு செல் தெரியும்.என்ன செய்றது?
    அதுக்குதான் டபுள் சிம் இருக்கே.இன்கமிங்க்கு மட்டும் பழைய கனெக்ஷன்.
    பேசறதுக்கு க்கு TATA DOCOMO ன்னு காலத்தை ஓட்டிட்டு இருக்கோம்.
    ஹைதராபாத் வரும்போது தாரளமாக சந்திக்கலாம்.என் e mail - id ,phone no
    உங்களுக்கு மெயில் செய்கிறேன்.வரும்போது கண்டிப்பாக தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete
  20. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும். விவாதம் பதிவாகியுள்ளது. முடிவு மக்களுக்கு நன்மையாகட்டும்.

    ReplyDelete
  21. இவ்வளவு சீர்கேடுகளுக்குப் பின்னும் BSNL வளர்ந்தோங்க வேண்டும் என்பதில் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி. நிச்சயமாக BSNL-ன் வருங்காலம் வளமுள்ளதாக அமையும். தனது ஊழியர்களுக்குத் தருவது போலவே மக்களுக்கும் வாடகை இல்லாத டெலிபோன் வசதியை உருவாக்கும். அனைத்து வகை மக்களும் பலன் பெறுவர்.

    ReplyDelete

Kindly post a comment.