மதுரா டிராவல்ஸ் நிர்வாகிக்கு, "கலைமகள் புதல்வன்" பட்டம் சூட்டப்பட்ட விழா!
ஐ.சி.எஃப். காலனி சென்னைப் புறநகரில் உள்ளது. ஆங்கே, வி.கே.எஸ். மஹாலில் ஒரு பரத நாட்டிய அரங்கேற்றம் நிகழ்ந்தது. அது அரியதொரு கலைநிகழ்ச்சியாக அமைந்தது. ஏனெனில், பரத நாட்டியம் ஆடியவர், சில ஆண்டுகளுக்கு முன் இதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர் என்பதால்தான் இஃது அரிதானது. நடன மஞ்சரி பட்டத்தை நடன அர்ங்கேற்றத்தின் போதே பெற்றுவிட்ட நடன மங்கை செல்வி.வி.சௌந்தர்யா மற்றும் நிகழ்ச்சி குறித்த விரிவான தகவல் தனிப்பதிவில் பட்ங்களுடன் விரைவில்!
ஒரு கல்லில் இரு மாங்காய் என்பது போன்று, உலக மக்களுக்க்காக மாதந்தோறும் வெளிவந்துகொண்டிருக்கும் விகடகவி தமிழ் மாத இதழ் தக்கதொரு செயலாற்றித் தன் தகுதியை மேலும் உயர்த்திக் கொண்ட்டது.
சொல்வதைச் செய்யும், செய்வதைச் சொல்லும் விகடகவி ஆசிரியர், எஸ்.ஜே. பால் முயற்சியில், சிறப்பு விருந்தினர், வி.கே.டி. பாலன் அவர்களுக்கு,"கலைமகள் புதல்வன்" என்ற பட்டம் சூட்டப் பட்டது.
கவிதை விபரம்தான் வி.கே.டி. பாலன் படத்திற்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தெளிவாகப் படித்திட கவிதையின் மேல் சொடுக்கவும். நன்றியுடன்.
வி.கே.டி. பாலன் குறித்த தகவல்களுக்கு,
http://www.maduratravel.com/profile.htm
http://www.worldtamilnews.com/
http://www.madurawelcome.com/
0 comments:
Post a Comment
Kindly post a comment.