Sunday, January 10, 2010

செம்மொழி மாநாட்டில் செத்து மடிவோம்- தமிழை நேசித்து தமிழைப் படித்த பட்டதாரிகள் சூளுரை?



உள்ளூர்த் தொழிலாளர்களை ஒன்று சேர்க்க முயற்சிக்காத கம்யூனிஸ்டுகள் தெருக்க்களில் முழங்குவார்கள். "உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்" என்று!

அதேபோன்று உள்ளூர்த் தமிழ் படித்தவர்களை வேதனைக்குள்ளாக்கிவிட்டு, உலகச் செம்மொழி மாநாட்டிற்கு அச்சாரம் போட்டுள்ளார், டாக்டர், கலைஞர்!

சில கட்டுரை வாசிப்புக்களும், கருத்தரங்கங்களும், அலங்கார ஊர்திகள் ஊர்வலமும் தமிழைச் செழுமைப் படுத்தி விடுமா? நாள்தோறும் சிந்தித்துச் செயல்பட்டாலே முடியாத காரியம்: ஓரிரு நாட்களில் என்ன செய்துவிட முடியும்?

போராட்டம்- கால வரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டம்- கைது- விடுதலை - கலெக்டர் ஆலோசனை என்று தத்தளிக்கும் தமிழாசிரியர்களைக் கவனியுங்கள்!

தமிழில் எம்.எல்.எம்பிஃல், பி.எட். பிஎச்.டி எல்லாம் படித்த வடபாதி கிராமம் பூமிநாதனைப் போல் எல்லோருமே தற்கொலை செய்துவிடாம்ல் காப்பாற்றுங்கள்!

வேலையில்லாப் பட்டதாரித் தமிழாசிரியர் மாநிலச் செயலாளர் சந்திர சேகரன்... பணி வேண்டும் புலவர் கழகத்தின் அமைப்பாளர் குணசீலன் ஆகியோர் கோரிக்கைகள் நிறைவேறட்டும் என்று வாழ்த்துவதொன்று தானே நம்மால் முடியும்?






http://www.newkerala.com/news/fullnews-20870.html
http://www.newkerala.com/news/fullnews-20870.html

1 comments:

  1. வேகம் வேகம்...அய்யா தமிழினத்திற்கு முடிந்ததை செய்யுங்கள்..

    11.01.2010 திங்கட்கிழமை - இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படப்போகிறார்களா?
    மூலம்:http://chinthani.blogspot.com/2010/01/11012010-255.html

    ReplyDelete

Kindly post a comment.