சென்னைப் புறநகரில் ஓர் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஓர் அனுபவம்!
fixed deposit காலம் முடிந்தபின் பணத்தை எடுக்க்கச் சென்றிருந்தேன். உரிய கால்ம் முடிந்தபின் பணத்தை என்னசெய்ய வேண்டும் என்பதை வாடிக்கையாளரிடம் கேட்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்! அப்படி ஒன்றும் சட்டம் சொல்லவில்லை என்றார். அப்படிச் சட்டத்தில் இடம் இல்லையென்றாலும் தாங்கள் தெரிவிப்பதுதான் சரியான வழி என்று கூறிச் சென்று விட்டேன்.
ஆனால், அந்த வங்கிப் பெண்மணியோ, சார்! தங்கள் கணக்கில் சிறு தொகை தவறாகக் கழிக்கப் பட்டிருக்கும். ( வருமான வரி செலுத்துவது எனது பொறுப்பு என்று உறுதியளித்து விட்டால் வங்கி அவர் கணக்கில் வரிப்பிடித்தம் செய்யக்கூடாது. ஆனால் எல்லோருக்கும் பிடித்துவிட்டுத்தான் ரீபண்ட் செயார்களாம். இது எந்த ஊர் நியாயம்?} நாங்கள் அதனை Journel போட்டுச் சரிசெய்து உங்கள் கணக்கில் வரவு வைத்துவிடுவோம். அதற்குரிய பெண்மணி இன்று வரவில்லை. அதனால் இன்று சாத்தியமில்லை. என்று சொன்னார்.
கிளை மேலாளரை அணுகினேன். குறிப்பிட்ட ஒருவரின் பெயரைச் சொல்லிப் பார்க்குமாறு கூறினார். அந்த நபரை அணுகினேன். கூட்டமாக இருந்தது. அரை மணி நேரத்திற்குப்பின் அவரை அணுகினேன். இப்போ பணம் எடுக்கப் போறீர்களா என்ரு வள்ளென்று எரிந்து விழுந்தார். வார்த்தைகள் தடித்தன. கஸ்டமர் என்றாலும் எல்லை உண்டு என்று வாதாட ஆரம்பித்தார். வேண்டுமாயின் கணக்கினை முடித்துக் கொள் என்றும் பேச ஆரம்பித்துவிட்டார்.
இவரிடம் பேசிப் பயனில்லை என்று மீண்டும் மேலாளரை அணுகினேன். இன்று என் கணக்கில் அந்தப் பணம் வ்ரவு வைக்கப் ப்டவேண்டும். அவ்வளவுதான் என்றேன். மாலை 4 மணிக்கு மேல் நான் அவரை அழைத்து விபரம் கேட்டால் பதில் சொல்வேன் என்று உறுதியளித்தார்.
மாலையில் கேட்டேன். Ok ஆனது, மறுநாள் PAAS BOOK-ல் பதிவு செய்து கொண்டேன்.
நான் கேட்பதெல்லாம்
ஒருவர் வரவில்லையென்றால் அவர் வந்தபின்தான் அந்த வேலையைப் பார்க்கமுடியும் என்று சொல்வது சரிதானா?
மேலும் அந்த ஊரில் ஒரே வங்கியின் இரண்டு கிளைகள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அளவிற்கு அவசியம் இல்லை என்பதே மக்கள் கருத்து.
கிளை மேலாளர் தலையிட்டபின் மட்டும் அது எப்படிச் சாத்தியமானது?
மேலும் ஒரு வார்த்தை;
வங்கிகள் சீரமைக்கப் படவேண்டும் என்று மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் இன்னும் துரிதப் படுத்திடல் வேண்டும்.
பல வங்கிகள் இணைக்கப்பட்டால் நிர்வாகச் செலவுகள் குறையும்!
ஒரே தெருவில் பல தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள் தேவையில்லை. எந்த வங்கியாக இருந்தாலும் அந்தப் பணம் முழுவதும் பாரதத்தின் சொத்துதானே?
இல்லாத ஊர்களில் கிளைகள் திறபதுதானே நியாயமாக இருக்க முடியும்?
வங்கிகள் இணைக்கப்பட்டால் என்னவாகும் என்று யோசித்துப் பார்த்தேன். ஒரே ஒரு பதில்தான் கிடைத்தது.
ஒரே பிறந்த நாள்/ வேலைக்குச் சேர்ந்த நாள் அடிபடையில் அனைவரது SENIORITY LIST முறைபடுத்தப்படும் பொழுது கொஞ்சம் PROMOTION பாதிக்கப்படும் என்பதுதானே முட்டுக் கட்டை!
எல்லாக் கடன்களும் வங்கி ஊழியருக்கு 1% வட்டி என்றே கருதுகின்றேன். ஆனால் அதே கடனிற்கு பொதுமக்கள் கொடுக்கும் வட்டி விகிதம் எவ்வளவு என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் தலை சுற்றுகின்றதா நண்பர்களே?
மத்திய அரசு அதிரடி நடவடிக்கையாக் அனைத்து அஞ்சல் அலுவலகங்களையும் வங்கிச் சேவையிலும் ஈடுபடுத்துமானால், இந்த தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறைந்து போகும்.
எதேச்சதிகாரம் செலுத்திய டெலிகாம் - பி.எஸ்.என்.எல். ஆக்கப் பட்டபின் தட்டுத் தடுமாறுவதைக் கண்ணால் பார்த்த பின்னும் மாறவில்லையென்றால் காலம் தன் கடமையைச் செய்யத் தயங்காது வங்கி அன்பர்களே!
வடக்கு-கிழக்கு- மேற்கு-தெற்கு என நான்கு அல்லது 5 மண்டலங்களின் கீழ் கொண்டு வந்துவிட்டால் நிர்வாகச் செலவுகள் மிக மிகக் குறைந்து விடும் என்பதுதானே உண்மை?
"உண்ணாமற் தின்னாமற் அன்ணாமலையார் கொள்ளை" என்று யார் யாரோ பயன் பெறுவதால் நாட்டிற்கு என்ன நன்மை?
ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் என்பதுதானே ஆன்றோர் வாக்கு!
வங்கியின் பெயர் : இந்தியன் வங்கி. இடம்: அம்பத்தூர்.
மக்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொண்டிருக்கும் கிளை மேலாளர் பெயர்:
d.anthony xavier இடம்: அம்பத்தூர்.
VAAZHKA NII EMMAAN!
these people do not mind if you close account with them. I have account in SBI, Adyar. I wanted to update the statement of transactions in my passbook at ambatur branch. They did not do it.
ReplyDeleteThey said it was not their job.
what to do?
i am also face same but now i am in afghan and i am cancel my A/C from that bank and transper to mugaper
ReplyDeleteஹா ஹா ஹா ஹா என்னாங்க இதெல்லாம் போய் எதிர் பாக்கறீங்களே? நடக்குமா? உங்க ஒரு ஆள விட அவங்க யூனியன் ஸ்ட்ராங் தெரியுமா? இது போன்ற இடங்களில் நாமே தொடர்புகளை துண்டித்து விடுவதுதான் இப்போதைக்கு சரியான வழி... அவர்கள் நிச்சயம் திருந்தவே மாட்டார்கள்....
ReplyDeleteI don't think that the banks are lending housing loans at 1% interest to their staff. Kindly verify and write.
ReplyDeleteSabapathy
There was a mistake in my previous comment. It should be read as follows. 'I don't think that the banks are lending loans at 1% interest to their staff.'
ReplyDeleteSabapathy
Knowing that you would not allow this comment to appear in your blog, I am still posting my comment. I do not say that bank employees are sincere in their job. What I want to say is that the information given by you regarding interset charged for staff loan is not correct.
ReplyDeleteSabapathy
No loan is given at 1% to bank staff by banks - the housing loan is at 5% and 11% slabs and all other loans are charged from 10% to 12.5%.
ReplyDeleteOnly festival advance (basic plus DA) is given at NIL interest every year once.
Merging of all banks is not a single solution for better customer service rather the merger will result the opposite sometimes.
I accept there may be deficiency in customer service in some occasions and it will not be a routine one in all bank branches - If the service is very poor, that bank cannot stand for a long time.
Pl understand that after introduction of computers, the Bank Management aims at reduction of staff at counters to increase the profitability, at the same time the bank branches have to canvass and open new accounts every day/week/month/year - both deposits and loans.
The per employee business in banks has increased from 20 lakhs to 4 crores on an average and the same person has to deal more customers within the limited business hours.
Only a few banks have started recruiting clerical/officer while most of the banks still not taken any steps to fill up the vacancies arising out of retirement etc.,
Ramdoss
வட்டியின் உண்மை நிலைதனை தெரியப்பதுடுத்தியமைக்கு நன்றி.ஆனால் வங்கிகள் சீரமைக்கப்பட வேண்டியது நடைமுறைப்படுத்தவேண்டியது காலத்தின் கட்டாயம். தைரியமாய் செய்யவேண்டியகாரியம். ஒவெர்கெட்-நிர்வாகச் செலவிலவுகள் குறையும். இது உறுதி.
ReplyDelete