பாம்பாட்டிக்குக் காசு வசூல் தான் முக்கியம்! பாம்பையும் கீரியையும் சண்டை போட விடுவதாக்ச் சொல்லுவான்! ஆனால் இரண்டையும் மோதவிட்டால் இறுதியில் எதாவது ஒன்று தோற்றாலும் பாம்பாட்டிக்குதான் நஷ்டம்! அதனால் கடைசி வரை இரண்டையும் மோதவிடமாட்டான்!
இந்த அரசியல் வாதிகளும் அபடித்தான்! பொது மக்களுக்கு நன்மை செய்தாகச் சொல்வார்கள்! ஆனால் செய்வது மிகவும் குறைவு!
இத்தனை சாலைகள் போட்டேன்; பாலங்கள் கட்டினேன்; ........என்றெல்லாம் அரசாங்கம் விளம்பரம் செய்தால் எனக்குச் சிரிப்புத்தான் வரும். அதச் செய்வதற்காகக்தானே மக்கள் உங்களைத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.
ஓர் குடும்பத் தலைவன், என் மனைவிக்கு -என் குழந்தைகளுக்கு இன்னின்ன வாங்கிக் கொடுத்தேன்- என் அப்பா-அம்மாவை என்னோடு கூட வைத்திருக்கின்றேன் என்றெல்லாம் சொல்வது எவ்வளவு நகைப்புக்கு உரிய செய்தியோ, அதுபோலத்தான் அரசாங்க விளம்ம்பரங்களும்!
எனவே, உங்கள் வாழ்த்துக்களும்- விளம்பரங்களும், எங்களுக்கு வேண்டாம்; வேண்டவே வேண்டாம்!
அதுசரி! கவர்னர் பதவி அவசியமில்லை என்று கழகம் பல முறை சொல்லியுள்ளதே, இப்பொழுது மத்தியும், மாநிலமும் உங்கள் கரங்களில்தானே!கவர்னர் பதவி குறித்த தி.மு.க.வின் கொள்கைகளைச் செயற்படுத்துவதுதானே!
0 comments:
Post a Comment
Kindly post a comment.