குயில் பாட்டு! குயில் பாட்டு! குயில் குயில் பாட்டு! குயில் பாட்டு!
காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே
நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்
மோகனமாக்ஞ் சோதி பொருத்தி முறைதவறா
வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி
வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய
செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்
மேற்கே, சிறுதொலைவில் மேவுமோரு மாஞ்சோலை,
நாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்
வந்து பறவைசுட வாய்ந்தபெருஞ்சோலை
அந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே,
வேடர் வராத விருந்துத் திருநாளில்,
பேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்
வீற்றிருந்தே, ஆண்குயில்கல் மேனி புளகமுற
ஆற்ற லழிவுபெற, உள்ளத் தனல் பெருக
சோலைப் பற்வையெல்லாம் சூழ்ந்து பரவசமாய்க்
காலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க
இன்ன,ம்உதைக் காற்றிடை எங்குங் கலந்ததுபோல்,
மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்
வந்து பரவுதல் போல், வானத்து மோகினியாள்
இந்தவுரு வெய்தியதன் ஏற்றம் விளங்குதல்போல்,
இன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை
முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்
பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்
நெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே- கண்டேன் யான்
கன்னிக் குயிலொன்று காவிடத்தே பாடியதோர்
இன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்
"மனிதவுரு நீங்க்கிக் குயிலுருவம் வாராதோ?
இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,
காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ
"நாதக் கனலிலே நம்முயிரைப் போக்கோமோ?"
என்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்,
அன்றுநான் கேட்டது அமரர்தாங் கேட்பாரோ?
குக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே
தொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே
அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்;
விந்தைக் குரலுக்கு, மேதினியீர்,என்செய்கேன்!
யுகப் புரட்சியை இந்தியாவிலிருந்தபடியே வாழ்த்தி வரவேற்ற் பிறவிக் கவிஞர் பாரதி, படியிறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் எந்த ஊர் என்று கேட்கிறார்.அந்தப் பெண் 8 எழுத்துக்களைக் கொண்ட தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் ஊரின்பெயரினைச் சொல்கின்றாள்! அது எந்த ஊர்?
ஒரே ஒரு CLUE -தருகின்றேன். அந்த ஊரின் கோவிலில் உள்ள அம்பாளின் மேல் பாரதி ஓர் பாடலைப் பாடிட அஸ்திவாரம் போட்டுள்ளார். ஆனால், பாடல் முற்றுப் பெறவில்லை!
முதற்பரிசு500ரூபாய்! இரண்டாம் பரிசு 300 ரூபாய்! மூன்றாம் பரிசு 100 ரூபாய்!
தமிழில் வலைப்பூ பதிவாளராக இருக்கவேண்டும்!
வலைப்பூ பதிவராகி ஒருஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
ஒராண்டிற்கு மேல் உள்ளவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்.
வலைப்பூ விபரம், மின்னஞ்சல் முகவரி, தொடர்புகொள்ளத் தொலைபேசி/மொபைல் எண் விரும்ப்பினால் தரலாம்.
சீராசை சேது பாலா! சுய தம்பட்டம்!
அக்டோபர் 10தேதிதான் கணினியில் வலைப்பதிவாளர்!
இந்த நிமிடவரை 8368 அன்பர்கள் rssairam.blogspot.com
செனை-18, மஹாராஜா சூர்யா சாலை,
புதிய எண்:19, -ல்
வசிக்கும் மானுட விசுவாசி
முத்துக்குமாரசாமித் தம்பிரான் அவர்கள்!
அதே முகவரியில் இந்தப் பதிவாளரையும் சந்திக்கலாம்! இந்தப் பதிவாளருக்குத் திருமண்நாள் ஜனவரி 18!
அன்று ஜீவா நினைவு நாள்!
மாற்றுதிறன் சார்ந்த 50 குழந்தைகளுடைய இல்லத்தில் மதிய உணவு! அவர்கள் கேட்டது 1500/- கொடுக்கப்பட்டது. கலந்து கொள்ள விரும்புவோர் எனது e மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்!
திருச்சி பயிர் அறத்திற்கு, டிசம்பர்-2008-முதல் 1000 ருபாய் காணிக்கை செலுத்தி வருகின்றேன். இது ஆயுள் வரை தொடரும்!
மதுரா டிராவல்ஸ் ,
"கலைமாமணி, "
" கலைமகள் புதல்வன்"
வி.கே.டி. பாலன் அவர்களால், அறிமுகப் படுத்தப்பட்ட ஓர் மாற்றுத் திறன் உடைய அன்பு நண்பர்க்கு, இரு மாதங்களுக்கு ஒரு தடவை 1000 ரூபாய் தந்து வருகின்றேன்.
நன்றி நண்பர்களே!
நன்றி! தங்கள் படிப்பிற்கும் அறிவிற்கும் நான் zero. மீண்டும் நன்றி!
ReplyDelete