Wednesday, December 23, 2009

சமய குருவின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் வெள்ளம்,!


CLERIC GRAND AYATOLLAH HOSSEIN ALI MONTAZERI- மரண ஊர்வலத்தில் வெள்ளமெனத் திரண்ட மக்கள் கூட்டம்! அரசுக்கெதிரான முழக்கங்களும் எழுப்பப் பட்டதாக இணையங்கள் தெரிவிக்கின்றன.

பல்லாயிரக் கணக்கான மக்கள் கூட்டத்தினர் காணப்பெற்றதாக புரட்சியாளர்களின் இணையம், JARAS- கூறுகின்றது.

MIRHOSSEIN MOUSAVI, MEHDI KARROUBI ஆகிய எதிர்க் கட்சித் தலைவர்கள் , MONTAZERI'S வீட்டில் அஞ்சலி செய்தனர்.


மரண ஊர்வலத்தில் பச்சைத் துணிகளுடனும், அவரது போட்டோக்களுடனும் மக்கள் பங்கேற்ற காட்சி.

1979-ல் ஈரானில் நிகழ்த்திய இஸ்லாமியப் புரட்சித்தலைவர்களுள் ஒருவர். அயதுல்லா கோமேனிக்குப் பிறகு அவரது வாரிசாகவும் சிலகாலம் தொடர்ந்தார்.

http://www.spiegel.de/fotostrecke/fotostrecke-50093-6.htm

காசியிற் பேசுகின்ற புலவர் உரைதாம் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்யச் சொன்னார் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார். இன்று உலகத்தின் ஏதோ ஓர் மூலையில் நடக்கும் நல்லது கெட்டதுகளை வீட்டிற்குள் கொண்டுவரும் அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்டது. ஆனால், மனிதம் வளர்ந்திருக்கின்றதா என்பதே கேள்வி.

மரணித்தவரின் செல்வாக்கு சரிந்ததும், 5 ஆண்டுகளுக்கு மேல் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டிருந்ததும், மீண்டும் ஆர்த்தெழுந்ததுமான செயல்பாடுகள் இருப்பினும், கல்லறைக்குச் செல்ல அவரது உடல் இன்னும் 125 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டுமாம். அதற்குள்தான் எத்தனையெத்தனை கெடுபிடிகள்? அத்தனையையும் மீறி இத்தனை பேரென்றால் அவரைப்பற்றி முழுமையாகத் தெரியாத நிலையில் என்ன சொல்லிவிட முடியும்?

மனிதம் போற்றுவோம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.