கடவுளின் குழந்தை யேசு துள்ளித் திரிந்த பூமி!
இஸ்ரேலில் உள்ள நாசரேத் கிறிஸ்துவ கலாச்சாரங்களைக் கொண்டதோர் ஊர். அதன் அருகேதான் இந்த நிகழ்வு .
கல்லறைப் புதைகுழிகளின் அருகில் உள்ள அந்தச் சிற்றூரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்திருக்கக்கூடும். நான்கு ஏக்கர் பரப்பளவில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில், எளியதோர் யூதக் குடும்பம் வாழ்ந்த பகுதியில் இருந்த வீட்டின் உட்புறத்தைத்தான் படத்தில் நாம் காண்கின்றோம்.
தேவதை கன்னி மேரியிடம் கூறிய குழந்தை யேசு நண்பர் உற்றாருடன் ஓடி விளையாடிய இடமாக இது இருந்திருக்கும் என்று அகழ்வாராய்ச்சி நிபுணர், யார்தேனா அலெஃஸன்ரே எடுத்துக் காட்டுகளுடன் கூறுகின்றார்.
மக்கள் இதனைப் பற்றிப் பேசுகின்றார்களோ இல்லையோ இங்கு எடுக்கப் பட்டுள்ள கற்கள் கதை பேசும் என்று உறுதியுடன் உரைக்கின்றார்.
2009-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ்- புத்தாண்டிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலைமையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகின்றது.
நன்றி-: டைம்ஸ் ஆப் இந்தியா, 22, டிசம்பர், 2009.
0 comments:
Post a Comment
Kindly post a comment.