சில நேரங்களில் என்ன நிகழ்கிறது என்பதையே மனிதரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அது போல்தான் இதுவும்!
ஹ்சன் இப்னு சாலிஹ் (ரஹ்) மற்றும் அவர் சகோதரர் மட்டுமே அந்த அறைக்குள் இருந்தனர். சகோதரர் படுத்த படுக்கையாய்க் கிடந்தார். சகோதரரின் நலம் நாடி இப்னு அல்லாவிடம் தொழுது கொண்டிருந்தார்.
நோய்வாய்ப் பட்டிருந்த சகோதரருக்குத் தன் உடன்பிறப்பு இறைவனிடம் தனக்காகத் தொழுது கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை. தாகம் வாட்டுகின்றது. தொழும் சகோதருருக்கு தண்ணீர் கேட்கும் உடன்பிறப்பின் குரல் கேட்கவில்லை.
தொழுகையை முடித்தபின் நோய்ப் படுக்கையிலிருந்தவரிடம் தாகத்திற்கு எதுவும் தேவையா என்று கேட்க, அவர் இப்பொழுதுதானே நீர் அருந்தினேன் என்ற கூற்றே பதிலாகக் கிடைக்கின்றது.
இருவரைத் தவிர வேறெவரும் இல்லாத அறையில் இவருக்கு யார் தண்ணீர் தந்திருக்க இயலும் என்ற வினா எழுகின்றது. விளக்கம் கேட்கின்றார்.
நோய்வாய்ப் பட்ட சகோதரர், ஹஜ்ரத் ஜிப்ரயீல் (அலை) அவர்கள்தான் தண்ணீர் கொண்டு வந்து புகட்டினார்கள் என்று விளக்கம் தந்தார்.
மேலும் ஒரு மகிழ்ச்சியான தகவலும் கிடைத்தது. நீயும், உன் சகோதரரும் உன் தாயும் அல்லாஹ் தன்னுடைய ரஹ்மத்தை யாருக்குக் கொடையாகக் கொடுத்துள்ளானோ அத்தகைய கூட்டத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.
அதாவது, நபிமார்கள், சித்தீக்கீங்கள், ஷுஹ்தாக்கள், சாலிஹீங்கள் கூட்டத்தில் இருப்பீர்கள் என்பதாகவும் தெரிவித்துச் சென்றார்கள்.
( இப்னுசன்தா)
மௌல்வீ் ஏ.அப்துல்கனீ மன்பயீ எழுதியது.அனஸ் புக் சென்டர், 81,அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1-லிருந்து1992, 1993, 1995, 1996-ல் 4-ஆம் பதிப்பாக வெளியிட்டது.
Tuesday, December 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.