உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்-: உலகின் விலைமிகு இரு சக்கர வாகனம்:-
On the web: http://www.harley-davidson.com
இந்த இணையதளம் சென்று பார்த்தால் ஒரு நிறுவனம் எப்படி இயங்கவேண்டு்ம் என்பதை அறியலாம்.
V R S C ----- V- TWIN RACING STREET CUSTOM
2001-ல், V.ROD -ஆக வாழ்க்கையைத் துவக்கியது. பின்னர், ஹார்ட்லி - டேவிட்சன், "POWER CRUISER" ஆகப் பரிணமிர்த்தது.
2008-ல், 1.1 L, (1130CC, 69 CU IN) முதல் 1.31 (1250 CC, 76 CU IN) ஆக உயர்ந்தது.
வெளி நாட்டில் இதன் விலை தெரியவில்லை; தேடிய போது, குமுதம் கை கொடுத்தது.
220 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடிய இந்த பைக் மாடல்கள் உலகில் 1200-தான் இருக்கின்றனவாம்.
இதன் விலை இந்தியா வந்து சேர்ந்த போது 20,00000/- ரூபாய் தான்!
இரு சக்கர வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சிவராம கிருஷ்ணன், சிங்கப்பூரிலிருந்து மேற்படி பைக்கை வாங்கி வந்துள்ள விபரத்தை குமுதம் 23-12-2009-இதழ் மூலமாகத் தெரிந்து கொள்ள முடிந்தது.
குமுதத்தில் சாண்டில்யன் எழுதிய மன்னன் மகள் வெளிவந்த காலத்திலிருந்து அதன் வாசகன், நான்! கரிகாலன் குதிரையில் பயணிக்கும் காட்சி இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றது.
பின்னர், யவன ராணி, கடல் புறா படித்த ஞாபகம் இருக்கின்றது.
அதிலும், பாசம் என்ற எம்.ஜி.ஆர். நடித்த படத்திற்கு குமுதம் எழுதிய விமர்சனம், இன்றும் நன்றாக ம் நினைவில் இருக்கின்றது.
எம்.ஜி.ஆரையும் அவர் ஜோடியையும் ( சரோஜா தேவி என்று ஞாபகம்) இடது பக்கத்தில் போட்டு விட்டு, அதனடியில், பாசம் என்றொரு படமாம்; அதில் இது ஒரு காட்சியாம் என்று எழுதிவிட்டு, வலப்புறப் பக்கத்தை வெள்ளைப் பக்கமாகவே விட்டிருந்தது இன்றும் நன்றாக நினைவிலிருக்கின்றது.
இன்று 61-வயதிலும் என் கேள்விக்கான பதிலைக் குமுதம் தீர்த்து வைத்திருக்கின்றது என்பது குறித்துப் பெரு மகிழ்வு கொள்கின்றேன்.
குமுதத்தின் தொடர்ந்த வாசகனாக இருப்பதால்தான், பிரச்சினைகளை எதிர் கொள்ளும் தைரியம் வந்துள்ளதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.
எதையோ விரும்பிய மனத்தின் தேடலின் தூண்டுதலால் இணைய தளத்தில் குமுதத்துடன் உலாவந்த போது அழகி என்ற தமிழ் இலவச மென் பொருள் கிடைத்தது.
த்கவல் தொழில் நுட்பத் துறையில் பீடு பெறப் பறந்து கொண்டிருந்த ஓர் இளைஞர், எதிர்பாராத குணப்படுத்த முடியாத நோய்க்கு ஆளாகி 4 ஆண்டுகள் படுத்த படுக்கையாகிச் செலவிட்ட நேரத்தில் கண்டுபிடித்ததுதான் அழகி மென் பொருள் என்றறிந்தபோது அதன்பால் ஈர்ப்பு அதிகமானது.
தமிழில் என்னாலும் கணினியில் எழுத இயலும் என்ற நிலையை எனக்கு ஏற்படுத்தித்தந்த அழகி விஸுவின் புகழ் பரப்புவதொன்றுதான் எனது வாழ்க்கையின் குறிக்கோளாக்கிச் செயலாற்றி வருகின்றேன். அவரது ஆலோசனையால் இல்லம் குழுமத்தில் என்னை இணைத்துக் கொண்டேன். நாள் தோறும் எண்ணிறந்த செய்திகளும் தகவல்களும் என் மின்வீட்டில் குவிகின்றன.
அதன்பின், ரெட்ஹில்ஸ் மாற்றுத் திறன் உடைய சகோதரர் அந்தோணி முத்து
உதவியால், என் செய்திச் சேகரிப்புகள் பரப்புரையாகி நவம்பர், 2009 துவங்கி இந்த நிமிடம்வரை 6637- வாசக நண்பர்களை உலகம் முழுவதிலுமாகத் தேடித் தந்துள்ளது.
எப்படிப்பட்ட சுவையான தொடராக இருந்தாலும் டக்கென நிறுத்திவிட்டு அடுத்ததைத் தொடர்ந்திடும் குமுதத்தின் வழிகாட்டுதலே மீண்டும் வசந்தமானதோர் இன்றைய நிலைக்குக் காரணம் என்பதாலேயே இந்தப் பகிர்வும் பதிவும்.
என்னதான் இருந்தாலும் குமுதம் பால்யூவின் நட்புப் பூவின் வாசம் இந்த நாருக்கு இல்லாமலா போய்விடும்?
0 comments:
Post a Comment
Kindly post a comment.