கேஸ் சிலிண்டர் புராணம்!
வீட்டு உபயோகத்திற்காக வழங்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் சின்ன நடுத்தர பெரிய ஹோட்டல்களிலும் பயன் படுத்தப் படுகிறன; என்ற புகார்கள் அதிகமாக வந்த காரணத்தால், இந்திய ஆயில் நிறுவனத்தினர் சோதனகளை மேற்கொண்டனர்.
வட பழனி, ஆலப்பாக்கம், கே. கே. நகர், ஜீனிஸ் சாலை, சைதாப்பேட்டை, தேனாம் பேட்டை உள்ளிட்ட இடங்களில், ஹோட்டல், டீக்கடை என எல்லா இடங்களிலும் சோதனை செய்தபோதுப் 196 வீட்டு உபயோக சிலிண்டர்கள் கைப்ப்பற்றப் பட்டன.
ஒருநாள் மட்டும் போதவே போதாது. சில்ண்டர் கொண்டு வந்து போடுபவரின் சம்பளமும் பொதுமானதாக இல்லை என்பதும் ஓர் காரணம். அவர் நிலைமையில் மாற்றம் கொண்டு வர்ட வேண்டும்.
சென்னைப் புறநகர்ப் பகுதியில் ஒரு அரசு சிலிண்டர் சப்ளை செய்யும் கடையில் ஒரு நாளில் பாதி நேரம் டெலிபோன் ரிசீவரைக் கீழே எடுத்து வைத்து விடுகின்றனர். 10 தேதி பில் போட்டால் 15=20 தேதிகளில்தான் விநியோகம் செய்யப் படுகிறது. மீண்டும் பதிய 21 நாட்கள் எடுத்துக் கொள்கிறனர்.
மேலிடத்தில் புகார் செய்யப் போவதாகச் சொன்னபின்பு சொன்னவர்களுக்கு மட்டும் ஓரளவிற்குச் சரியாக வருகின்றது.
தேர் எப்பொழுது சரியாக ஓடத் துவங்கும்?
0 comments:
Post a Comment
Kindly post a comment.