தமிழக அரசு வணிகவரித் துறையில் ஓர் வேடிக்கை!
இநத அரசு அலுவகங்கள் ஒரு எலாஸ்டிக் பனியனைப் போன்றது. உதாரணத்திற்கு அந்த அலுவலகம் இயங்க 100 பேர் தேவை என்று கணக்கில் இருக்கும். ஆனால், 50-65 பேர்களிலேயே இயங்கிக் கொண்டிருக்கும். அதுதான் அரசு அலுவலகங்களின் தனிச் சிறப்பு.
எவ்வளவு வேலைப் பளுவினைத் திணித்தாலும் கவலைப்படாமல் செய்து கொண்டிருக்கின்ற புண்ணியாத்மாக்கள் ஒவ்வொரு அலுவலகத்திலும் உண்டு. ..அவர் இல்லையென்றால் சில விஷ்யங்களைத் தெரிந்து கொள்ளவே முடியாது.
அவருக்குச் சம்பந்தமே இல்லாதிருப்பினும் விரல் நுனியில் விபரங்களை வைத்திருப்பார். இப்பேர்ப்பட்டவர்களை நம்பித்தான் அந்த அலுவலகமே இயங்கும்.
அந்த அலுவலகத்தின் மூத்த உயர் அதிகாரியின் பகிரங்கமான பாராட்டொன்றுதான் அவருக்குத் தேவை. கொஞ்சம் ஃஃப்ரீயாக விட்டுவிட வேண்டும், அவ்வளவுதான்! 10 பேர் வேலையை முடித்துதருவார்.
அதனால்தான் 245 தலைமை அதிகாரிகள் இல்லாமல் கடந்த 3 ஆண்டுகளாக அர்சுக்கு வருவாய் ஈட்டித்தரும் வணிக வரித் துறை செயல்பட்டு வருகின்றது.
வரிவசூல், வரி விதிப்பு ஆகிய பணிகள், உதவி ஆணையர், வணிக வரி அலுவலர், உதவி வணிகவரி அலுவலர் ஆகியோருடைய பொறுப்பு. ஆனால், பதிவுச் சான்று வழங்கும் அதிகாரம் உதவி ஆணையருக்குத்தான் உண்டு.
உதவி ஆணையரின் பொறுப்பை அவருக்குக் கீழ் உள்ள வணிகவரி அலுவலர்கள் கூடுதலாகக் கவனிக்கின்றனர். அதே சமயத்தில், 120 வணிகவரி அலுவலகர்கள் உடைய பணி இடங்கள் காலியாக உள்ளன.
மேலும் உதவி வணிகவரி அலுவலகர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், த்ட்டச்சர்கள் என், 200-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.
சுதந்திர இந்தியாவில் கண்காணிப்பாளர்கள் பதவிகள் குறைக்கப் படவே இல்லை. வெள்ளைக்காரன் காலத்தில் அவனது நாட்டுக்குக் கொண்டு சேர்க்க வேண்டிய வருவாயை யாரேனும் அழுத்திவிடக் கூடாதே என்பதற்காக மேலாளர்களை வைத்து வேலை வாங்கினர். இன்னும் அதே நிலை தொடரவெண்டிய அவசியம் என்ன?
அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டிய கணினிக் காலத்தில் இருக்கின்றோம். ஒற்றைச் சாரள முறைதனைக் கொண்டு வந்து வரி விதிப்பு, வரி வசூல், வரிச்சான்றிதழ் வழங்கல் எல்லாவற்றையுமே ஒருவரே செயுமாறு பொறுப்பினைக் கொடுத்து விடலாம். பொறுப்புத் தவறினால் தண்டனையையும் கடுமையாக்கலாம். உரிய பயிற்சிகள் மட்டும் கொடுத்தால் போதும்.
குறிப்பிட்ட தொகைக்கு மேல் உள்ளனவற்றை மட்டும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றபின் சான்றினை வழங்கலாம்.
245 தலைமை அதிகாரிகள் இல்லாம்லேயே 3 ஆண்டுகள் அலுவலகம் இயங்கி வந்துள்ளதென்றால் இந்த ஃபார்முலா நிச்சயம் கை கொடுக்கும்,.
தொழிற் சங்கமும் பொறுப்புக்களையும் கேட்டு வாங்கி செய்தும் காட்டி. சம்பள உயர்வையும் கேட்கட்டும். ஒரு மேற்பார்வை அதிகாரிக்குக் கொடுக்கும் சம்பளத்தை , அந்த அதிகாரிக்குக் கீழ் உள்ள் 3 நபர்களுக்கு வழங்கலாம். இது நடைமுறைக்குச் சாத்தியம் என்பதையே கடந்த 3 ஆண்டுகளின் செயல்பாடுகள் நிரூபித்துள்ளன.
மின்சார இலாகாவில் மீட்டரில் கணக்கெடுப்பவரேதான் கௌண்டரிலும் பணம் வசூல் செய்கின்றனர். விவாதித்து நடைமுறையில் சின்னச் சின்ன மாற்றங்களைக் கொண்டு வந்தாலே போதும்.
பொறுப்பில் உள்ள அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் "ஈகோ" வை விட்டு இறங்கிவந்தால் overhead charges-ம் குறையும். வருவாயும் அதிகரிக்கும்.
காலம் மாறத்தானே வேண்டும்? ஆம்! நிச்சயம் மாறும்!
செயலாற்றுகிறதென்றால் இந்த ஃஃஃபார்முலா நிச்சயம் வெற்றியைத் த்ந்தே தீரும். கொஞ்சம் "ஈகோ" வைமட்டும் விட்டொழிக்க வேண்டும்.
சம்பள உயர்வுக்காகப் போராடும் தொழிற் சங்கங்கள் ஊழியரின் த்குதி மேம்பாட்டிற்குப் பாடுபட்டால் பொறுப்பும் கூடும். மகிழ்ச்சியும் கிடைக்கும்.
"தகுதி, திறமை என்பதெல்லாம் மோசடி வேலை" என்று படிக்காத மேதை காமராஜர் அடிக்கடி கூறுவார்.
உரிய நோக்கத்துடன் பயிற்சி கொடுத்தால் எல்லாம் பழகிப் போகும். பழகிப் போய்விட்டால் அந்தப் பழக்கம் வழக்கமாகிவிடும்.
தேவை "ஈகோ" இல்லாத புதிய சிந்தனை மட்டும் தான்!
உதவி: தினமணி, 22, டிசம்பர்,2009.
0 comments:
Post a Comment
Kindly post a comment.