Wednesday, December 23, 2009

இராமேஸ்வரம் பாம்பன் பாலமும் 20 கோடிச் செலவில் உருவாகும் ராடார் திட்டமும்:-


மேல்நோக்கித் திறந்து கப்பல் போக வழி விடவும், கீழிறங்கி இருபுறமும் உள்ள இரும்புத் தண்டவாளங்களை இணத்து ரயில்வண்டிகள் பயணிக்க வழிவிடவும் உதவும் பாம்பன் பாலம். 1914-ல் அமைக்கப்பட்டது. 2007-ல் சீரமைக்கப்பட்டது. உலக அளவில் இவ்வகையில் இப்பாலத்திற்கு இரண்டாவது இடம்.


20 கோடித் திட்ட மதிப்பீட்டில் DOPPLER WEATHER RADAR -பாம்பன் பாலத்தின் அருகில் இன்னும் இரு ஆண்டுகளுக்குள் நிறுவப் பட உள்ளது.

இந்த DOPPLER WEATHER RADAR, கொல்கத்தா, பாரடீப்(ஒரிசா), விசாகப்பட்டினம், மசூலிப் பட்டினம், சென்னை மற்றும் காரைக்காலில் உள்ளன.

இந்தியக் கிழ்க்குக் கடற் கரை முழுவதையும் கண்காணித்துக் கொள்ள இயலும்.

வாழிய பாரத மணித் திருநாடு!

நன்றி:-டைம்ஸ் ஆப் இந்தியா, 22, டிசம்பர்,2009.

0 comments:

Post a Comment

Kindly post a comment.