Wednesday, December 23, 2009

+ 2 முடித்தவர்கள் ஐ.ஐ.டி.யில் நேரடியாக சிறப்பு எம்.ஏ. படிக்கலாம்!

+2 தேர்வில் குறைந்த பட்சம் 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்!

SC, ST, மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் 55% மதிப்பெண் எடுத்தால் போதும்!

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, பெங்களூர், மும்பை, ஹைதராபாத், கொச்சி, திருவனந்தபுரம், கொல்கத்தா, டெல்லி, ஆகிய மையங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.

எல்லோருக்கும் தேர்வுக் கட்டணம் 800 ரூபாய் ஆகும். பெண்கள், SC,ST, வகுப்பினர், மற்றும் ஊனமுற்றோருக்கு கட்டணம் 400 ரூபாய் மட்டும்.

கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர் 044/2257 8220 என்ற எண்ணை அணுகலாம்.

http//: hsee.iitm.ac.in இணையத்தின் மூலம் on line-ல், விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பித்து டவுன் லோடு செய்த விண்ணப்பத்தை பிப்ரவரி மாதம் 1-தேதிக்குள் சென்னை IIT-க்கு அனுப்ப வேண்டும்.

இதற்கான நுழைவுத் தேர்வு மே மாதம் 2-தேதி நடத்தப் படும். தேர்வு 3 மணி நேரம் நடக்கும். ஆப்ஜெக்டிவ் முறையிலான தேர்வு 2.5 மணி நேரமும், கட்டுரை எழுதும் தேர்வு .5 மணி நேரமும் நடக்கும்.

மாணவர் சேர்க்கையில் ஆதி திராவிடர்களுக்கு 15%-மும், பழங்குடியினருக்கு 7.5% -மும், இத்ர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு (O.B.C) 27%-மும், இட ஒதுக்கீடு வழங்கப் படுகின்றது.

ஆங்கிலம், பொருளாதாரம், வளர்ச்சி ஆகிய பாடப் பிரிவுகளில் ஒருங்கிணைந்த எம்.ஏ. படிப்பு வழங்கப் படுகின்றது.

நன்றி:- தினத் தந்தி, 22-12-2009.

0 comments:

Post a Comment

Kindly post a comment.