உயர் கல்வி பெற விரும்பும் மாணாக்கரின் ஆங்கிலத் திறனைமேம்படுத்திட புதிய மென்பொருள் அறிமுகம்!
போதுமான ஆங்கிலப் புலமைக் குறைவே இன்றைய தமிழக இளைஞர்களின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் உள்ளது. தகவல் பரிமாற்றங்களுக்கான திறனை மேம்படுத்தும் புத்தகங்களையும், மென்பொருட்களயும் பயன்படுத்தித் தத்தம் திறமைகளை வளர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
மானிக் மங்கி- MANICK MONKEY -என்பது யுனைடெட் கிங்டத்தில் உள்ள ஓர் நிறுவனம். இபெக் லாபரட்டரீஸ் (EBEK LABORATORIES) சென்னை மற்றும் தமிழத்தின் பல் இடங்களில் இயங்கிவரும் ஓர் நிறுவனம்.
மேற்படி நிறுவனம் மானிக் மங்கியுடன் இணைந்து லிட்டில் ஃபிரிட்ஜ் என்னும் புதியதோர் மென்பொருளை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இது பள்ளிப் படிப்புக்கும் உயர்கல்விக்கும் இடையில் நிலவும் ஆங்கிலப் புலமைக் குறைவை ஈடு கட்டும். முற்றிலும் உரையாடல் வ்டிவிலேயே அமைக்கப் பட்டுள்ளது.
பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப் படுகின்றது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாமுழுமையுமாக 5 லட்சம் மாணாக்கருக்கு அறிமுகப் படுத்திடத் திட்டம் தீட்டியுள்ளது.
ஆர்வலர் அணுகவேண்டிய தொடர்பு எண்:-32427888
தேடலைத் தொடரும் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவே இந்த வலைப்பூ பதிவு.
0 comments:
Post a Comment
Kindly post a comment.