ஆடிக்காற்றில் அம்மியே பறக்கின்றது! ஜெயிலை இடம் மாற்றுகிறார், ஒபாமா?
கியூபா கம்யூனிஸ்ட் நாடு! அதனுடன் அமெரிக்கா எப்பொழுது எப்படி ஒப்பந்தம் செய்துகொண்டதோ? கியூபாவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள குவாண்டனாமோ விரிகுடாப் பகுதி அமெரிக்கா வசம் உள்ளது.
அங்கு அமைத்துக் கொண்ட கடற்படைத் தளத்தில், 2002-ளிருந்து அமெரிக்கா, தன்னிடம் பிடிபடும் போர்க் கைதிகளையும், கொடிய குற்றவாளிகளையும் அடைத்து வைத்துள்ளது. இராக் போர்க் கைதிகள் கொடூரமாகச் சித்ரவதை செய்யப் பட்டதாகப் படங்களுடன் செய்திகள் வெளியாயின.
அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலுக்கு இதனையும் ஓர் காரணமாகக் கூறிவந்துள்ளனர். அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகருமன்றோ? ஒபாமா, தற்பொழுது அங்கிருக்கும் கைதிகளை அமெரிக்காவிற்கு இடமாற்றம் செய்துவிடத் தீர்மானித்துள்ளார். க்வாண்டனாமோ சிறைச்சாலையையும் மூடிவிடுவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் தம்சன் மையத்துக்குக் கைதிகள் கொண்டு செல்லப் படுவர். விடுதலை செய்யப் பட மாட்டார்கள்.சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடரும் என்கிறார், உலக சமாதானத்திற்க்கான நோபல் பரிசை அண்மையில் பெற்றுள்ள,
ஒபாமா!
source:17,டிசம்பர்,2009,தினமணி: படங்கள்; இணைய தளத்திலிருந்து. கியுபா அருகில் உள்ள அமெரிக்காவின் படைத்தளத்தில் உள்ள சிறைச்சாலைகள்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.