Thursday, December 17, 2009

மரணிக்க அனுமதித்த டெல்லி உச்ச நீதி மன்றம்! இந்தியாவில் புரட்சித் தீர்ப்பு!



அருணா ராமச்சந்த்ரா ஷன்பக், 1966-ல் மும்பை கிங்க் எட்வ்ர்ட் மெமோரியல் ஹாஸ்பிட-லில் நர்ஸ் வேலையில் சேர்ந்தார்! வட கனரா மாவட்டத்தில் உள்ள ஹைதிபுரைச் சேர்ந்தவர்.


சொஹன்லால் பர்தா வால்மிகி என்ற ஆஸ்பிடல் வார்டு வேலைக்காரனால், 27-11-1973-ல் நர்ஸ் அருணாவின் பெண்மை சீரழிப்புக்குள்ளானது. நாய்ச் சங்கிலியால் கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டதால் மூளைக்குச் செல்ல வேண்டிய ஆக்சிசன் தடைபட்டு கோமாவில் விழுந்தார். படுத்த படுக்கையானார். மூன்று தலைமுறையாக சிகிச்சை தொடர்ந்தது. வால்மிகி சிறைத் தண்டனைக்கு ஆளானான்.


K.E.M. ஹாஸ்பிடல் நர்ஸுகளும், டாக்டர்களும் 36-ஆண்டுகள் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சைஅளித்து வந்தனர். சிகிச்சையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.எனவே வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பினார்.தற்பொழுது அவரது வயது 61: மூளைச் சாவு உறுதிப் படுத்தப் பட்டது.


டாக்டர்களும் குணம் பெற வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப் படுத்தினர். படுக்கையில் இருந்த அருணா தன் தோழி, பிங்கி விரானியை அணுகினார். அவரது வழக்கறிஞர் ஷெகர் நஃப்டெ மூலம் டெல்லி உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

அலசி ஆராய்ந்த உச்ச நீதிமன்றம் அருணா மரணித்திட அனுமதித்துள்ளது.

இதற்கு மேல் இதைப் பற்றி எழுதும் மனவுறுதி எனக்கில்லை.


இரை போடும் மனிதருக்கே இரையாகும் வெள்ளாடே என்றொரு பழைய திரைப் படப் பாடலதான் நினைவுக்கு வருகின்றது.

நாயைக் கட்டும் சங்கிலியால் கழுத்து இறுகும் பொழுது அருணா என்ன பாடு பட்டிருப்பார்?

அந்த மனித மிருகம் என்ன ஆனது?

சில ஆண்டுகளுக்குமுன் மணற்கேணியில் இது குறித்து விரிவான கட்டுரை அந்த அன்பரால் எழுதப்பட்டுள்ளது. பின்வரும் வலைப்பூவில் முழுமையாக்கக் காணலாம்.அதில் பல தகவல்கள், மற்றும் வலைப்பூ கட்டுரை எப்படி இருக்க வேண்டுமென்பதற்கான வழிகாட்டுதல்கள் அடங்கியுள்ளன.

http://marchoflaw.blogspot.com/2006/07/blog-post_28.html


source: TOI,decenber,17,2009, மற்றும் இணைய தளங்கள்.

2 comments:

  1. ANTHA MIRUKATHTHAI ETHAAVATHU THALAIVAR PIRANTHA NAALILO ALLATHU ETHAAVATHU VISESA DINATHTHIL VIDUVIKKA PADUVAAN.ITHE SEYALAI INNUM NANDRKA THITTAMITTU MAATTATHA ALAVIL SEIVAAN.

    ReplyDelete
  2. பிங்கி விரானியை அணுகுமளவுக்கு அருணாவுக்கு எவ்வித உடல் மற்றும் மன செயல்பாடுகள் எதுவும் இல்லை...

    2003ம் ஆண்டு நான் எழுதிய இணைய கட்டுரையொன்று இங்கே
    http://marchoflaw.blogspot.com/2006/07/blog-post_28.html

    ReplyDelete

Kindly post a comment.