தலமைத் தேர்தல் அதிகாரியின் நற்சான்றிதழ்! இப்படிப்பட்ட இடைத் தேர்தல் தேவைதானா?
"வாக்களிப்பதற்கு பணம், வேட்டி-சேலை விநியோகம், மது பானத்துக்கு டோக்கன், மொபைல் போன் ரீசார்ஜ் கார்டுகள் கொடுக்கப் படுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
செல்பொன் பேக்ஸ் மூலம் இந்தப் புகார்கள் வருகின்றன. நிகழுமிடத்திற்கு மாவட்ட அதிகாரிகள் செல்வதற்கு முன்பாகவே பணம் விநியோகக் குழுவினர் தப்பிச் சென்று விடுகின்றனர்.
17-A படிவத்தில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக வழக்குப் பதிவு செவதில் சிரமம் உள்ளது. அதில் வரிசை எண், புகைப்பட அடையாள அட்டை எண், வாக்காளரின் கையெழுத்து இடம் பெற்று இருக்கும்/
சாதகமான பதிலுக்கு மகிழ்ச்சியையும், பாதகமான பதிலுக்கு எதிர்ப்பும் அர்சியல் வாதிகளிடமிருந்து கிடைக்கப் பெறுகிறோம்.
அதிகாரம் என்பது மனிதனின் பலவீனமாக உள்ளது. அதிகாரத்தைப் பெற பல நல்ல வழிகள் இருந்தாலும் அதைப்பற்றி அவர்கள் கவலைப் படுவதில்லை."
திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ள பேட்டி இது!
தேர்தல் அதிகாரி வேதனைப் பட்டு என்ன பயன்? விபச்சாரத்தைக் கட்டுப் படுத்த முடியாவிட்டால் அதனை அங்கீகரிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றமே வழிகாட்டிவிட்டது.
ஒன்று தில்லுமுல்லுகளை அங்கீகரித்து விட்டுப் போங்கள்; புலம்பாதீர்கள்; அல்லது அநியாயங்கள் நடக்கின்றன; தேர்தலை இந்தச் சூழலில் நடத்த முடியாது என்று கறாறாகக் கூறிவிட்டுத் தேர்தலை ஒத்திவையுங்கள்!
மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் நீங்களாவது மக்கள் பக்கம் நில்லுங்கள்!
திருடனை போலீசார் திருடன் என்று தெரிந்தாலோ அல்லது சந்தேகப்பட்டாலோ கைது செய்து விசாரிக்கலாம்.
அதுபோன்று தவறாக நடமாடுபவர்களை நீங்கள்/அதிகாரிகள் ஏன் போலீஈசாரிடம் ஒப்படைக்கக் கூடாது?
எப்படியாவது தேர்தலை நடத்தித்தந்து விடுங்கள் என்று ஆள்வோர் வற்புறுத்துகின்றார்களா?
நீங்கள்தான் மக்களுக்குப் பதில் சொல்லவேண்டும், SIR!
source:தின மணி, 17, டிசம்பர்,2009.
0 comments:
Post a Comment
Kindly post a comment.