Thursday, December 17, 2009

சென்னை கோட்டை ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்?



source:தினமணி, 17,டிசம்பர்,2009,வியாழக் கிழமை

"1977 -ல் இளைஞர் அணி என்ற பிரிவில் இருந்து 700 முதல் 800 பேர் தலைமைச் செயலகத்துக்கு பணிக்கு வந்தனர். உதவிப் பிரிவு அலுவலர் என்று அழைக்கப் பட்டனர். பின்னர் பிரிவு அலுவலர் என்ற நிலைக்கு உயர்ந்தனர். இவர்களில் பலர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியில் இருந்து ஓய்வு பெற்று வருகின்றனர்.

தலைமைச் செயலகத்தில் சார்பற்ற பிரிவு அலுவலர் பணியிடங்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளன. உதவி பிரிவு அலுவலர் நிலையிலிருந்து, பிரிவு அலுவலர் நிலைக்கு பதவி உயர்வு அளிக்கப்படும்.

இவர்களது பதவி உயர்வு, சம்பளம் குறித்தெல்லாம் இங்கு எழுதப் போவதில்லை. ஆனால், 1977-ல் அந்த 700-800 பேர் எதனடிப்படையில் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர்?

அப்படி அவர்களை வேலைக்கு எடுக்கும் பொழுது அங்கிருந்த தொழிற்சங்கங்கள் ஏதெனும் ஆட்சேபணை எழுப்பினவா? அல்லது தங்களுக்கு வேண்டிய சிலருக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொண்டார்களா?

என்றெல்லாம் எனக்கு தினமணியைப் படித்தபின் ஐயங்கள் எழுந்தன். நம்பிக்ககுரிய நண்பர் மூலம் கிடைத்த தகவல் ஓரளவிற்கு திருப்தி அளித்தது.

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவைத்திருந்த பட்டதாரி இளைஞர்களே வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு service commission சிறப்புத் தேர்வு மூலம் அரசு ஊழியராக்கப் பட்டனர்.

வேலை வாய்ப்பு அலுவலகத்திலிருந்து அனுப்பப் பட்டவர்கள் அனைவரும் seniority அடிப்படையில்தான் தேர்ந்தேக்கப் பட்டனரா என்பது கேள்விக்குறியே?

மோட்டார் டிரைவர், கடைநிலை ஊழியர்கள் போன்றோர் மட்டும் நேரடிநியமனம் பெற்றிட வாய்ப்புக்கள் இருக்கலாம் என்பது தெரிய வருகின்றது. மற்றப்படி SERVICE COMMISSION -தான் எல்லாமே, தற்பொழுது!


தலைமைச் செயலகத்தில் 100 சார்பற்ற பிரிவு அலுவலர் பணி இடங்கள் தொடர வேண்டும் என்பதே இன்றைய கோட்டை ஊழியர்களின் கோரிக்கை!

நியாமான முறையில் யாராவது சிலருக்கு வேலை கிடைத்தால் சந்தோஷமே!

0 comments:

Post a Comment

Kindly post a comment.