Wednesday, December 16, 2009

டெல்லியில் தொடரும் புகை மண்டலம் !


பொது இடங்களில் புகை பிடிக்கக் கூடாது என்பது சட்டம்.


ஆனால், சட்டம் என்ன செய்து விடும் , மனிதராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் என்பதே கேள்வி?

டெல்லியில் ஆண்டொன்றி்ற்கு 46531 பேர் தண்டனை பெறுகின்றனர்.

சென்ற ஆண்டு தண்டமாக வசூலி்க்கப்பட்ட தொகை ரூபாய் 40 லட்சத்திற்கும் மேல்!

ஆனாலும், டெல்லியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பழைய நிலையே தொடர்கின்றது.

மதுவருந்தும் இடம், உணவு விடுதிகள், கடைகள் என, பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்ட பின்னர் இந்த செயதிதெரியவந்தது.

VOLUNTARY HEALTH ASSOCIATION OF INDIA-என்ற அரசு சாரா பொது நல அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்த உண்மைத் தகவல் இது.

DSR- designated smoking room -என்று புகை பிடிப்பதற்காகத் தனி அறைகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த முறை பல இடங்களில் பின் பற்றப் படவில்லை.

சட்டதிட்டங்களினால் கட்டுப் படுத்த முடியாவிட்டால், விபச்சாரத்தை அங்கீகரிக்கச் சொல்லியுள்ளது, இந்திய உச்ச நீதி மன்றம்.இதற்கும் பொருந்தும் தானே?

புகை நமக்குப் பகை என்பது தெரிந்த உண்மைதான் என்றாலும், காசு கொடுத்து உடம்பைப் புண்ணாக்கிக் கொள்கின்றது, மனித சமூகம்! அதுவே அவருக்குப் பெருந்தண்டனையாகி விடும்போது வேறு தண்டனை எதற்காக?

டெல்லி மதுக் கடைக்குள் சி்கரெட் பற்ற வைக்கும் ஓர் பெண்மணியின் படம் மேலே அச்சிடப்பட்டுள்ளது.

தீதும் நன்றும் பிறர் தர வாரா.- கணியன் பூங்குன்றனார்.

source: mid day mumbai

1 comments:

  1. இவங்க தனக்கு தீமை செய்யுறத விட அடுத்தவங்களுக்குதான் அதிகமா ஆப்பு வெக்கிறாங்க.இல்ல...சங்கு ஊதுறாங்க.

    ReplyDelete

Kindly post a comment.