Wednesday, December 16, 2009

200 ரூபாயிலிருந்து 10 லட்சத்திற்கு ! ஆறு மாதச் சிறைவாசத்துடன்!

http://www.mid-day.com/news/2009/nov/021109-delhi-fine-liquor-ad.htm

டெல்லியில் மது விளம்பரங்களுக்குத் தடை! மதுபான விளம்பரங்கள் எந்த விதத்தில் இருந்தாலும் முற்றிலுமாகத் தடை செய்யப் படுகின்றது.

இசை ஆல்பங்கள் வெளியிட்டாலும் சரி; ஆடை அணிகலன்கள் காட்சி விளம்பரங்களானாலும் சரி மதுபான அறிமுகங்களாக இருந்தால் அபராதம் உறுதியாக்கப் பட்டுள்ளது. முன்பெல்லாம் ரூபாய் 200 அபராதமாக இருந்தது. ஆனால், தற்பொழுது அது பத்து லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. அதனுடன் 6 மாதச் சிறைத் தண்டனையும் உண்டு. இரண்டும் இணந்தோ் அல்லது ஏதேனும் ஒன்றோ நிச்சயம்!

மது பான விளம்பரங்கள் நேரடியாகவோ அல்லது பிற ஏஜெண்டுகள் மூலமாகவோ செய்தித் தாள்கள், எல்லாவிதமான பத்திரிக்கைகள் அல்லது எந்தவிதமான ஊடகங்களிலோ பிரசுரிக்கும் பட்சத்தில் 10 லட்சம் அபராதத்தையும், ஆறு மாத சிறைத் தண்டனையையும் சேர்த்தோ அல்லது தனித் தனியாகவோ அனு்பவிப்பதிலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது. என்பதே செய்தி.

நமது தமிழகத்தில் பள்ளி/கல்லூரி -களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளோ அல்லது பீடி,சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களோ விற்பனை செய்யக் கூடாதென்பது விதி. ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லையே, இதை யாரிடம் போய்ச் சொல்வது?

source: mid day, mumbai

0 comments:

Post a Comment

Kindly post a comment.