Wednesday, December 16, 2009

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஓர் கேள்வி?



எம்.ஜி,ஆர். தனிக் கட்சி ஆரம்பித்தபோது ஏதேனும் சந்தேகம் வந்தால் இவரைத்தான் அடிக்கடி அழைப்பார். தொலை பேசிப் பேச்சுப் போதாதென்றால் காரை அனுப்பி அழைத்து வரச் செய்வார். அல்லது இவரே அவர் இருக்குமிடம் நோக்கி நேரிலேயே சென்று விடுவார்.

எம்.ஜி.ஆர் கொடி நடுவே அண்ணா படத்தைப் போடச் சொன்னதில் இவருக்கும் பெரும் பங்குண்டு.

அவர் எடுக்கும் முடிவுகள் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தியதை வரலாறு தெரிந்தவர்கள் மற்க்க முடியாது.

மூதறிஞர் ராஜாஜி மந்திரிசபை அமைத்தபோது , தனது அமைச்சரவையில் பங்கேற்க அழைத்தபோது, மறுத்துவிட்ட பெரு்ந்தகையாளர்.

பெரும்பாலும் டெல்லி ராஜ்யசபை பாராளுமன்ற உறுப்பினராகவே காலத்தைச் செலவிட்ட தொழிற்சங்கவாதி!

யார் அவர் என்று கேட்கத் தோன்றுகின்றதா?

அவர் தான் முதுபெரும் தோழர் எம்.கல்யாணசுந்தரம் ஆவார்! அவர் சாகும் வரை சொல்லிக் கொண்டிருந்தவற்றுள், "தேசியமமாக்கப் பட்ட வங்கிகள் சீரமைக்கப் படவேண்டும்" என்ற கருத்தும் ஒன்றாகும்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட்டாக ஓர் வியாபாரத்தில் ஈடு பட்டால் நிர்வாககச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள எந்த அளவிற்கு முயற்சி செய்வார்கள் என்பதைச் சிறிது கற்பனை பண்ணிப் பார்த்தால் போதும்! இந்த பொதுத் துறை வங்கிகள் நிர்வாகச் செலவுகளில் காட்டிடும் ஊதாரித்தனம்!

ஒரே தெருவில் பல்வேறு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எதற்காக? மக்களின் பணம் ஏதேனும் ஒரு பொதுத் துறை வங்கியில் இருந்தால் போதாதா?

சொந்தம்/ வாடகைக் கட்டிடம், மேஜை,நாற்காலி, கம்ப்யூட்டர் உள்ளிட்ட அவசியமான சாமான்கள், மின்சாரம் முதலான செலவுகள்- ஆக மொத்த நிர்வாகச் செலவுகள் வீண்தானே?

அவர்களுக்குள் "AREA" பிரித்துக் கொண்டு வங்கிகள் இல்லாத புதிய இடங்களில் கிளைகளைத் துவக்கலாமே ஏன் செய்ய மறுக்கிறார்கள்?

ஸ்டேட் வங்கி இந்தூரை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணத்துவிட்டால் என்ன குடியா முழுகிப் போய் விடும்? இன்றைய வேலை நிறுத்ததிற்கான தலையான காரணம் இதுதான்!

தொலைதொடர்புத் துறையில் பல முறை பல பிரிவுகள் இணைக்கப் பட்ட போது அந்த ஊழியர்களின் seniority பாதிப்புக்குள்ளாகத் தானே செய்தன? இழப்புக்களை அவர்கள் ஏறுக் கொள்ளத்தானே செய்தார்கள்.?

வங்கிகளுக்கு மட்டும் என்ன விதி விலக்கு? அனைத்து வங்கிகளுமே ஒருங்கிணக்கப் பட வேண்டும். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என 4 zonal-களாகப் பிரித்துக் கொண்டால் போதுமானது. அவசியமானால் ஒன்றிரண்டைக் கூட்டிக் கொள்ளலாம், தேவைக்கேற்ப!

ஒட்டு மொத்தமான சீனியாரிட்டி லிஸ்ட் தயாரிக்கப் படல் வேண்டும். அப்பாயின்மெண்ட் நாட்களின்படி இணக்கப் படும்பொழுது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்? அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


மொத்தத்தில் வங்கி ஊழியர்கள் பேச்சு வார்த்தை மூலமாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். போராட்டம் தேவையற்றது.

வங்கிகள் இணைப்பு காலத்தின் கட்டாயம். எல்லா வங்கிகளுமே இணைக்கப் படுவதுதான் நாட்டிற்கு நல்லது.

கிராமங்கள் தோறும் படர்ந்துள்ள போஸ்ட் ஆபீஸ்கள் சீரமைக்கப்பட்டு அவற்றில் வங்கிகளின் சேவைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டால்,

தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளின் முக்கியத்துவம் இல்லாமற் போய்வி்டும். வேலை வாய்ப்பும் பெருகும். அப்படிப்பட்ட காலம் வராமலா போய்விடும்?

0 comments:

Post a Comment

Kindly post a comment.