Tuesday, December 15, 2009

செல்லாதையா செல்லாது! படிப்பும் பட்டமும் செல்லாது!



திறந்த வெளிப் பல்கலைக் கழகங்களில் பெற்ற முதுகலைப் பட்டங்கள் செல்லாது. 2008-ஆம் ஆண்டில் பதிவு செய்த 100 வழக்கறிஞர்களின் பதிவை தமிழ்நாடு மற்றும் புதுச்ச்சேரி பார் கௌன்சில் ரத்து செய்துள்ளது.

12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பும் இளங்கலைப் படிப்பும் முடிக்காதவர்களுக்குக் கூட, திறந்த வெளிப் பல்கலைக் கழகங்களில் எம்.ஏ. போன்ற முது கலைப் பட்டங்கள் வழங்கப் படுகின்றன.

1985-ளிருந்தே திறந்த வெளிப் பல்கலைக் கழகங்கள் செயல் பட்டு வருகின்றன. எனவே, 1988-முதல் 2008-வரை பதிவு செய்துள்ள அனைத்து வழக்கறிஞர்களின் சான்றிதழ்களும் சரிபார்க்கும் பணி தொடங்கப் பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் 65 ஆயிரம் பேர் வழகறிஞர்களாகப் பார் கவுன்ஸிலில் பதிவு செய்துள்ளனர். இவர்களில் 1000-க்கும் மேற்பட்டோர் திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றிருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.அவர்கள் சான்றிதழ்கள் விபரங்கள் சரிபார்க்கப் பட்டு பதிவு ரத்து செயப்படும். பார் பதிவுக் குழுத் தலைவர் செல்வம் தரும் தகவல் இது.

இத்தகைய 34-பேரின் விண்ணப்பம் 2008-ல், பார்கவுன்சிலால் பதிவு செய்ய மறுக்கப் பட்டது.உச்ச நீதிமன்றம் சேர்த்துக் கொள்ளச் சொல்லி ஆணையிட்டது. சேர்த்துக் கொள்ளப் பட்டார்கள்.

12 ஆண்டுகள் பள்ளிப் படிப்பும் இளங்கலைப் படிப்பும் முடிக்காதவர்களுக்குக் கூட, திறந்த வெளிப் பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும் எம்.ஏ. போன்ற முது கலைப் பட்டங்கள் செல்லாது என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. அதனால்தான் இந்த முடிவு.

இதுவே எல்லாத் துறைகளிலும் பின்பற்றப் படுமானால் திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களில் படித்தோர்/படித்துக் கொண்டிருபோர் கதி என்ன?

திறந்தவெளிப் பல்கலைக் கழகங்ககள் குறித்த "வெள்ளை அறி்க்கை" வேண்டும்?
தினமணி 15,டிசம்பர்,2009

0 comments:

Post a Comment

Kindly post a comment.