ஹைதராபத் நிஜாமின் கடைசிப் பேத்தியும் ரஜினிகாந்தின் மகளும்!
ஹைதராபாத் கடைசி நிஜாம் பேத்தி, ஃபாத்திமா ஃபௌசியாவுக்கும் ராஜேஷ் மல்ஹோத்ரா என்பவருக்கும் சொத்து விற்பனையில் தகராறு! ஒப்பந்தம் கைகூடவில்லை. எனவே, 87.14 ல்ட்சத்தை வட்டியுடன் திரும்பக் கேட்டார்,ராஜேஷ். 1.01 கோடிக்கான காசோலை கொடுக்கப்பட்டது, நிஜாமின் பேத்தியால்!
ஆனால்,"செக்" செல்லாக் காசானது; திரும்பிவிட்டது. இது நடந்தது,2002-ல்! வழக்குத் தொடர்ந்தார். ஜுலை-2009-ல் தீர்ப்பானது. இரு தவணைகளில் கொடுத்துவிடச் சொன்னது, சென்னை உயர் நீ்தி மன்றம்! உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்தார்,ஃபாத்திமா.
இறுதி்யில் மொத்தத் தொகையையும் தந்து விடுவதாக ஒப்புக் கொண்டுள்ளார், நிஜாம் பேத்தி; தண்டனையினின்றும் தப்பித்துக் கொள்ள வேறு வழியில்லாததால்!
தடையில்லாச் சான்றிதழ் தமிழக அரசிடமிருந்து பெற வேண்டு்மாம். மொத்தத் தொகையும் தரவேண்டும். தண்டனையினின்றும் தப்பிக்கவும் வேண்டும். ஹைதராபாத் கடைசி நிஜாமின் பேத்தியுடைய இன்றைய நிலமை இதுதான், இந்த வழக்கில்!
ரஜனிகாந்த் மகளும் கடன் தொல்லையில் மாட்டிக் கொண்டுள்ளார். அது சரி, இவர்களுக்கு மட்டும் இவ்வளவு தொகை எப்படி கைமாறுகின்றது எளிதாக? 5-க்கும் 10-க்கும் சாமன்யர்களைச் சிறைச்சாலைக்குள் தள்ளிவிடும் காவல் துறையும், சட்டமும் பணக்காரர்களை பாவிக்கும் விதமே அலாதிதான்!
பணம் பத்தும் செய்யும் என்று பெரியவர்கள் சொல்லிச் சென்றது இதற்காகத் தானோ?
source:TOI,15,december,2009.
ithuvum oru vizambaram than
ReplyDelete