காய்ச்சலையும், வயிற்றுப் போக்கையும் வராமல் தடுத்திட வழி என்ன?
காய்ச்சலும், வயிற்றுப் போக்குமே சென்னை நகருக்குள் கடந்த மூன்று/நான்கு மாதங்களாகப் படு வேகமாகப் பவனி வருகின்றதென்பது மருத்துவர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.நண்பர்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் எப்படியாவது உள்/வெளி நோயாளிகளாவதைத் தடுக்க முடியவில்லை.
கடுமையான காய்ச்சல், சளித் தொல்லை,இருமல், உடல்வலி, உடற் சோர்வு, மனச் சோர்வு தொடர்கதையாகி வருகின்றன.தடுத்திட வழி என்ன?
சுட வைத்து ஆறிய தண்ணீரையே குடித்திடல் வேண்டும்.வெளியே சென்றால் மினரல் வாட்டர் மட்டுமே பயன் படுத்துதல் அவசியம்.
வசிக்கும் இடங்களைச் சுற்றி மழை நீர்த் தேங்குவதால் அவற்றில் கொசுக்கள் குடியேறாமல் கவனித்துக் கொள்வதும், வீட்டில் உள்ள நீர்த்தொட்டிகளையும் சுத்தப்படுத்துதலும் மிக மிக அவசியம்.
வெளியில் நறுக்கி துண்டுகளாக்கப் பட்டு விற்கப்படும் பழவகைகள், காய்கறிகள் இவற்றை வாங்கிப் பயன் படுத்தாமல் இருப்பது நலம்.
நன்கு பக்குவப்படுத்தி சமைக்கப்பட்ட உணவு வகைகளையே உண்பதுதான் நல்லது.
இவற்றையெல்லாம் அலட்சியப் படுத்திடாமல் கடைப்பி்டித்தோமானால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது.
source:TOI,December,15,2009
very good news
ReplyDelete