போலீஸ்டேசனுக்குப் போகாதே! கோர்ட் வாசப் படியை மிதிக்காதே !
சொல்லிச் சென்றார்கள், நம் முன்னோர்கள்; ஆனால், வாழ்க்கையில் ஓரிரு முறையாவது காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடுகின்றது.
நடந்து நடந்து கால் செருப்பும் தேய்ந்து போகும்; மணிப்ர்ஸும் காலியாகும். ஒரு கட்டத்தில் சனியன் விட்டால் போதும் என்று எண்ணினாலும், அதற்கும் சிலகாலம் காத்திருக்க நேரிடும்.
10,000-க்கும் மேற்பட்ட சிவில் வழக்குகள் தேங்கியுள்ளனவாம்! வெள்ளைக் காரன் காலத்தில் கடைப்பிடித்த மைலார்ட் மாற்றத்திற்கே சுதந்திரத்திற்குப் பின் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. நடைமுறை மாற்றங்களுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
சினிமாக்களில் வேண்டுமாயின் அஜீத்தும், விஜயும் கோர்ட் காட்சியில் வீர வசனங்கள் பேசலாம். ரசிகர்கள் கைதட்டலாம். ஆனால், நடைமுறையில் மூச்சு விடக் கூட முடியாது, இதுதான்,உண்மை!
சில தகவல்கள்:- தேங்கிக் கிடக்கும் சிவில் வழக்குகள்:-
1. மறுதாக்கல் 1880 & 1881.... இது 1991-ஆம் ஆண்டிற்குரியது.
2. மறுதாக்கல் 1182 இது 1992-ஆம் ஆண்டிற்குரியது.
3. மறு தாக்கல் 665& 663 இது 1993-ஆம் ஆண்டிற்குரியது.
4. அப்பீல் சூட் 426 இது 1991-ஆம் ஆண்டிற்குரியது.
5, அப்பீல் சூட் 908 இது 1992-ஆம் ஆண்டிற்குரியது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதத்திற்கு 8000-ம் வழக்குகள் தீர்ப்புச் சொல்லப்பட்டாலும், இவை போதுமானதல்ல. 38 வழக்காடும் அறைகள் உள்ளன. நாளொன்றுக்கு சுமார் 10 வழக்குகள் தீர்ப்பளிக்கப் படுகின்றன.
கிராமநியாயாலாய பரிந்த்துரைப்படி பஞ்சாயத்து நிலையிலேயே 5000-ம் நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஏழை மக்களின் வீட்டுவாயிலிலேயே நியாயம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும்.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் பின்பற்றப்படும் e-court வழியைச் சென்னையிலும் அமுலாக்கலாம். இதனால் நேரமும், பேப்பர் வேலைகளும் மிச்சமாகும் என்றும் தகவல் கூறப்பட்டது.
எப்படியோ நீதீ கோரிக் காத்திருப்போருக்கு விரைவில் நீதி கிடைத்திட ஒன்றாய்ப் பிரார்த்திப்போம், நீதி தேவர்களிடம்!
நன்றி : நியூஸ் டுடே, 19-12-2009.
0 comments:
Post a Comment
Kindly post a comment.