"கொண்டு சென்றாலும் செல்லாவிட்டாலும் தாய்" என்பது அந்தக் காலத்தில் தூக்குத் தூக்கி என்ற படத்தில் வரும் 4 ஆதார சுருதிகளில் ஒன்று.
35 ஆண்டுகள் சிறைக்குள் இருந்த மகன் குற்றவாளி இல்லை என்று தீர்மானிக்கப்பட்டதால் வெளியே வருகின்றான். வரவேற்கக் காத்திருக்கின்றாள், தாய்!
1974-ல் ஜேம்ஸ் பெயின் சிறுவன் ஒருவனைக் கடத்திக் கற்பழித்த (?) குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்றுச் சிறைக்குச் சென்றார்.. டி.என்.ஏ. சோதனையில் இவர் குற்றவாளி இல்லை என்று தீர்மானமாயிற்று.
56-வயதானவரின் வாழ்க்கை காரணம் எதுவுமே இல்லாமல் கழிந்துவிட்டது சிறையில்!
"எனக்குக் கோபம் வரவில்லை.ஏனெனில், கடவுள் என்னோடு இருக்கின்றார்" என்பதே ஜேம்ஸ் பெயினின் பதில்!
சிறையிலிருந்து வெளியே வந்ததும் முதலில் தொலைபேசிமூலம் பேசியது தன் தாயுடன்!
டி.என்.ஏ, டெஸ்டுக்காக இவனுடன் ஜெயிலில் இன்னும் 246 பேர் காத்திருக்கின்றார்கள் என்பதுதான், சோகம்! அரசு வருத்தம் கூடத் தெரிவிக்கவ்ல்லை இவரிடம்!
என்னதான் சொன்னாலும் போன இளமைக் காலங்கள் திரும்பியா வந்து விடும்?
போனது போனதுதான்; பட்டது பட்டதுதான்: ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வாங்கித் தர வக்கீல் ஒருவர் வந்திருக்கின்றார். ஃஃப்ளொரிடாவில் நடந்த அவலச் செயல்: இதுதான் தகவல்!
சென்னையில் ஏதேனும் வாகன விபத்து நடந்து விட்டதென்றால். தாமாகவே வந்து காப்பீட்டுக் கழகங்களிலிருந்து இழப்பீடு பெற்றுத் தர சில வக்கீல்கள் உள்ளனராமே? உண்மைதானா? ஏதெனும் அனுபவங்கள் இருந்தால் சொல்லுங்களேன், அன்பர்களே!
நன்றி: TOI.
Sunday, December 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.